‘பாகுபலி 2’ 1000 கோடி வசூல்! : ரசிகர்களுக்கு பிரபாஸ் நன்றி

Get real time updates directly on you device, subscribe now.

baahubali21

லகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘பாகுபலி 2’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 9,000 தியேட்டர்களில் ரிலீசானது.

‘பாகுபலி 2’ வருகிறது என்கிற தகவல் கிடைத்தவுடன் அதை விடச் சிறிய படங்கள் எல்லாமே அது வந்து சென்ற பிறகு வரலாம் என்கிற எண்ணத்தில் அப்படியே ரிலீஸ் தேதிகளை தள்ளி வைத்து விட்டனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ரிலீசான இந்தப்படம் இப்போது புதிய சரித்திர சாதனையை எட்டியிருக்கிறது.

ஆமாம் சுமார் 1000 கோடியை வசூல் செய்து இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்திருக்கிறது ‘பாகுபலி 2’.

அந்தச் சாதனைக்கு காரணமான ரசிகர்களுக்கும், ‘பாகுபலி’ படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலிக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார் நாயகன் பிரபாஸ்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது :

எனது இதயத்தில் வாழும் எனதறுமை ரசிகர்களுக்கு,

நான் நடிகனாக அறிமுகமான நாள் முதல் இன்று வரை என்னை உங்களின் அன்பு எனும் அடை மழையால் நினைய வைத்ததற்கு எந்நாளும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

Related Posts
1 of 9

இந்தியா, வெளிநாடு என அனைத்து இடங்களிலும் இருந்தும் என்னை உங்களின் அளவற்ற அன்பினால் திக்குமுக்காட செய்ததற்கு நன்றி கடனாக என்னுடைய முழுத் திறமையையும் வெளிபடுத்தி உங்களை மகிழ்விக்க முயற்சி செய்துள்ளேன். அதில் வெற்றியும் கண்டுள்ளதாக அனைவரும் கூறுகின்றனர்.

என்னுடைய ‘பாகுபலி’ பயணத்தில் நான் கைப்பற்றிய அம்சங்களில் முக்கியமானவர்கள் நீங்கள் தான். உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்ட படைப்பில் என்னைக் கதாநாயகனாக்கி வாழ்நாள் முழுவதும் நொடிக்கு நொடி நினைத்துப் பெருமைப்படும் வாய்ப்பை அளித்த இயக்குனர் SS. ராஜமௌலி அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்.

இத்தருணத்தில் பாகுபலி படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.

நன்றி.

இப்படிக்கு,

பிரபாஸ்

இவ்வாறு பிரபாஸ் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.