இறுதிகட்ட படப்பிடிப்பில் பிரபாஸின் ‘சாஹோ’
‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘சாஹோ’.
அதிக பொருட்செலவில் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக அதிரடி ஆக்ஷன் திரில்லர் படமான இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்திற்காக இரண்டு பாடல்கள் ஆஸ்திரியாவின் இன்ஸ்ப்ரூக் மற்றும் டிரோல் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டன.
சுஜீத் இயக்கத்தில் பல மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் மற்றும் நடன இயக்குனர் வைபவி மெர்ச்சண்ட் ஆகியோர் இன்ஸ்ப்ரூக்கிற்கு வந்தனர். பிரபாஸ் உடன் ஸ்ரத்தா கபூர், முரளி சர்மா, நீல் நிதின் முகேஷ், வெண்ணிலா கிஷோர், ஜாக்கி ஷெராஃப், அருண் விஜய், சங்கி பாண்டே மற்றும் மந்திரா பேடி ஆகியோர் நடித்துள்ளனர்.