பிரபாஸின் ‘சாஹோ’ ரிலீசுக்கு ரெடி!

Get real time updates directly on you device, subscribe now.

‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் பாரம்பரிய நடைமுறை மற்றும் எது முடியும், எது முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் உடைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

‘பாகுபலி’ படத்துக்காக முழுமையாக ஐந்து ஆண்டுகளை அர்ப்பணித்த ஒரே நடிகராக திகழ்ந்தார் பிரபாஸ். அவரது கடின உழைப்புக்கு பலனாக உலகம் முழுக்க பல்வேறு சாதனைகளை புரிந்தது ‘பாகுபலி’.

பிரபாஸ் ரசிகர்கள் அவரது அடுத்த படமான “சாஹோ”வுக்காக பொறுமையாக காத்திருக்கிறார்கள், அவர்கள் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

பிரபாஸ் இன்ஸ்டாகிராமில் சுட்டிக் காட்டியது போல படம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts
1 of 140

சரித்திர சாதனை படைத்த ‘பாகுபலி’ படத்துக்கு பிறகு ‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸின் நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் வானளாவிய ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது. கதையை பற்றிய எந்த ஒரு செய்தியும் இதுவரை வெளியாகாத நிலையில் இந்தப்படம் எப்படிப்பட்ட படம் என்கிற எதிர்பார்ப்புகளை ஒரு திரைப்படம் உருவாக்கியிருப்பது இதுவே முதல் முறை.

‘ஷேட்ஸ் ஆஃப் சாஹோ’ பாகம் 1 மற்றும் பாகம் 2 மேக்கிங் வீடியோக்கள் பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூரின் பிறந்த நாட்களில் முறையே வெளியிடப்பட்டது. ஒரு புதிய பிரபாஸை காட்டியிருக்கும் அந்த வீடியோக்கள் இது ஒரு பிரமாண்ட ஆக்‌ஷன் திரில்லர் படம் என்பதை பறை சாற்றுகிறது. இருந்தாலும் படத்தின் ஒருவரி கதை புதிராகவே உள்ளது.

யு.வி. கிரியேஷன்ஸ் மிகப்பிரமாண்டமாக தயாரிக்க, சுஜீத் இயக்கியிருக்கும் இந்த சாஹோ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகிறார் ஷ்ரத்தா கபூர். ஜாக்கி ஷெராஃப், மந்திரா பேடி, நீல் நிதின் முகேஷ், சுங்கீ பாண்டே மற்றும் ஈவ்லின் ஷர்மா ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.