‘பாகுபலி’யின் புது வெர்ஷன் : ‘மிச்சம் மீதி’யை வைத்து திட்டம் போடும் ராஜமௌலி!
இந்திய சினிமா வரலாற்றில் இந்தப் படம் செய்த சாதனையை வேறு ஏதாவது படம் முறியடிக்குமா? இல்லையா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்தளவுக்கு உலகம் முழுக்க உள்ள சினிமா ரசிகர்களை தனது பிரம்மாண்டத்தால் ஆச்சரியப்படுத்தியதோடு, வசூலையும் வாரிக்குவித்தது எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ திரைப்படங்கள்.
இன்னும் 5 பாகங்கள் வந்தால் கூட நாங்கள் ரசிக்கத் தயார் என்று எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காகவே பாகுபலி படத்தின் இன்னொரு வெர்ஷனை வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.
ஆமாம் ‘பாகுபலி மற்றும் ‘பாகுபலி 2’ ஆகிய இரண்டு படங்களும் படமாக்கப்பட்ட போது வெட்டியெறியப்பட்ட காட்சிகள் ஏராளமாக மிச்சமிருக்கிறதாம். அந்த மிச்சம் மீதிக் காட்சிகளோடு பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் ரசிகர்களை அதிகம் ஈர்க்காத காட்சிகளை நீக்கி விட்டு முக்கியமான ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற போர்க்காட்சிகளோடு வேறு சில காட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு முழு நீள புதுப்படமாக வெளியிட முடிவு செய்திருக்கிறாராம்.சுமார் மூன்று மணி நேரம் ஓடும் அளவுக்கு தயாராகும் இப்படத்துக்கு டைட்டில் இன்னும் முடிவாகவில்லை.
ஆக பாகுபலி இன்னொரு புது வெர்ஷனை ரசிகர்கள் திரையில் பார்த்து மகிழலாம் என்பது மட்டும் உறுதி.