ஜூலியின் கெட்ட பெயரை மாற்ற ‘பசையுள்ள பார்ட்டி’ செய்த தந்திரம்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஜுலி.
தொடர்ந்து விஜய் டிவிக்காக கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அதன் மூலம் கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஒரு பக்கம் சின்னத்திரையில் பிஸியாக இருந்தாலும் ஜூலிக்கு பெரிய திரையிலும் நாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தபடி தான் இருக்கின்றன.
விமல் சொந்தமாக தயாரித்து நடித்திருக்கும் மன்னர் வகையறா படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்தவர் தற்போது ‘ஜூலியும் 4 பேரும்’, ‘தப்பாட்டம்’ படங்களின் நாயகன் பப்ளிக் ஸ்டார் துரை ஜோடியாக டைட்டில் வைக்கப்படாத புதுப்படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியிருக்கிறார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜூலிக்கு நல்ல பெயர் கிடைத்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அந்த நல்ல பெயரை தனது தவறான நடவடிக்கைகளால் கெடுத்துக் கொண்டார்.
இதனால் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஜூலியை எந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பார்த்தாலும் கேலி செய்வது, கிண்டல் செய்வது என செம கலாய் கலாய்க்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் இந்தப் புதுப்படத்தில் ஜூலியின் மீதானை இமேஜை நல்ல விதமாக மாற்றும் படியான ஒரு கேரக்டரில் நடிக்க வைக்கிறாராம் படத்தின் ஹீரோ துரை சுதாகர்.
ஆமாம், படத்தில் தன்னுடைய நிஜ பெயரான ஜூலியானா என்ற பெயரிலேயே வரும் அவர் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட பெண்ணாக நடிக்கிறாராம்.
படம் ரிலீசானா ரசிகர்கள் என்ன எதிர்வினை ஆற்றுவார்களோ?