லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனரை’ கைப்பற்றிய ‘ஏஜிஎஸ்’

Get real time updates directly on you device, subscribe now.

டிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் ஹவுஸ் ஓனர்.

‘பசங்க’ கிஷோர், லவ்லின் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இந்த படத்தை மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணா சேகர் டி.எஸ். ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கும் இப்படத்தின் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பிரபல ஏ.ஜி.எஸ் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

இதுகுறித்து இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும்போது, “பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், வினியோகஸ்தர்கள் பெரிய ஹீரோக்களின் படங்களுத் தான் முன்னுரிமை தருவார்கள். ஏஜிஎஸ் சினிமாஸ் எங்கள் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருப்பது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம்.

Related Posts
1 of 136

தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிப்பது, பெரிய படங்களை ரிலீஸ் செய்வதற்கு பெயர் போன ஏஜிஎஸ், எங்களை போன்ற சிறிய பட்ஜெட்டில் உருவான படத்தை ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டியிருப்பது உற்சாகத்தை அளிக்கிறது. இது எங்கள் குழுவினருக்கு மட்டும் கிடைத்த வெற்றி என்று நான் கூற விரும்பவில்லை, நல்ல கதைகளை கொண்ட படங்களுக்கு பெரிய கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது என்று தான் கூறுவேன்.

ஏஜிஎஸ் சினிமாஸ் படத்தின் வெளியீட்டுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருப்பதால், மிகப்பெரிய அளவில் படம் மக்களை சென்று சேரும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.

மேலும் “படம் மனித உறவுகளை பற்றி பேசுவதோடு, ஒரு அழகான காதல் கதையையும் கொண்டிருக்கிறது. எளிய மற்றும் யதார்த்தமான படமான இதை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என நான் நம்புகிறேன்” என்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்.