கும்கி பொண்ணா இது? – புதிய தோற்றத்தில் அசரடிக்கும் லட்சுமிமேனன்

Get real time updates directly on you device, subscribe now.

கும்கி, கொம்பன் என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நாயகியாக நடித்தவர் லட்சுமிமேனன்.

மார்க்கெட் ஸ்டெடியாக போய்க்கொண்டிருந்த போதும், உடம்பை பராமரிக்கிற விஷயத்தில் அக்கறை காட்டததால் மிருதன், ரெக்க போன்ற படங்களில் குண்டாகக் காட்சியளித்தார். அவருடைய அந்த தோற்றம் ரசிகர்களுக்கு எரிச்சலைக் கிளப்பியதோடு, அவரை கடுமையாக விமர்சனமும் செய்தார்கள்.

Related Posts
1 of 17

இதனால் பட வாய்ப்புகள் குறைய, வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். இப்படியே போனால் சினிமாவை விட்டே விலக வேண்டியிருக்குமோ என்று பயந்தவர் கடந்த சில மாதங்களாக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கினார். இப்போது உடல் எடையைக் குறைத்து புது லுக்கில் காட்சி தருகிறார் லட்சுமிமேனன்.

தற்போது பிரபுதேவாவிற்கு ஜோடியாக யங் மங் சிங் நடித்து வரும் லட்சுமிமேனன் தொடர்ந்து படங்களில் நடிக்க தனக்கு தெரிந்த இயக்குனர்களுக்கு தூது அனுப்பியிருக்கிறார். கூடனே ஸ்லிம்மான தனது புது தோற்றத்துடன் கூடிய புகைப்படங்களை அனுப்பி வைக்கிறாராம்.

”சிறிது நாட்கள் படங்களில் நடிக்காமல் இருந்தேன், தற்போது படங்களில் கமிட் ஆகி வருகின்றேன். உடல் ஸ்லீம்மாகி விட்டதால் முழு எனர்ஜியோட டான்ஸ் ஆடுவேன். ஒர்க்- அவுட் எல்லாம் செய்ததே இல்லை. மேலும், அம்மா என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார் அவ்வளவு தான் என்கிறார் லட்சுமிமேனன்.