எவண்டா அது விஜய்க்கு எதிரா வேலை செய்றது? : கொந்தளிப்பில் ரசிகர்கள்

Get real time updates directly on you device, subscribe now.

vijay1

ன்னும் இரண்டு நாட்கள் தான் பாக்கி. வருகிற டிசம்பர் 23-ம் தேதியை வைரலாக்க திட்டமிட்டிருந்தார்கள்.

ஆனால் அதற்குள் படத்துக்கு எதிராக சில குசும்பர்கள் செய்த சதி வேலையால் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

எல்லாம் ‘பைரவா’ பாடல்கள் லீக்கான சமாச்சாரம் தான்.

தமிழக முதல்வர் மறைந்ததையடுத்து பைரவா படத்தின் பாடல்களுக்கு விழா வேண்டாம் என்று விஜய் கேட்டுக் கொண்டதையடுத்து வருகிற 23-ம் தேதி வெள்ளிக்கிழமை பைரவா படப்பாடல்களை இணையதளங்களில் வெளியிட முடிவு செய்திருந்தது தயாரிப்பு நிறுவனம்.

Related Posts
1 of 89

அன்றைய தினம் சமூக வலைத் தளங்களில் பைரவா படப்பெயரை வைரலாக்கவும் விஜய் ரசிகர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தீரென்று நேற்று பைரவா படத்தின் பாடல்கள் அனைத்தும் லீக்கானதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் மட்டுமில்லாமல் விஜய் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

ஏற்கனவே பைரவாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசரும் இப்படித்தான் திட்டமிட்ட தேதிக்கு முன்னரே இணையத்தில் லீக் ஆனது. அதேபோல இப்போது பைரவா படத்தின் பாடல்கள் ஐ-ட்யூன்ஸில் வெளியானது. அதை அடுத்தடுத்து சிலர் பரப்பி விட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஜய் ரசிகர்கள் யார்டா அது விஜய்க்கு எதிரா வேலை செய்றது? என்று சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்போடு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.

அதோடு இப்படி தொடர்ச்சியாக பைரவா படத்துக்கு எதிராக இந்த பரப்புகிற வேலையை செய்வது யார்? யார்? என்பதையும் கண்டுபிடித்து அவர்களை எச்சரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் கொந்தளிப்பு இருந்தாலும் பைரவா பாடல்கள் எல்லாமே கேட்கும்படி அமைந்திருப்பதால் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்து வருகிறார்கள்.