விஜய் மில்டன் வெளியிட்ட ‘கருப்பு காக்கா’ ஃபர்ஸ்ட் லுக்!
பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்து கதை எழுதிறேன்னு போன ஒரு நபரின் வாழ்க்கையில நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து காமெடி மற்றும் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக தயாராகி வரும் படம் தான் ”கருப்பு காக்கா”.
இந்த படத்தில நான் கடவுள் ராஜேந்திரன், டேனியல், ராட்டினம் சுவாதி, ஜார்ஜ் , ஆதித்யா டிவி டாப்பா, அஞ்சலி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மொட்டை ராஜேந்திரன் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பில் இந்த படம் முழுவதும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். பிற கதாபாத்திரங்களான டேனியல், சுவாதி, ஜார்ஜ் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இந்த படம் ஒரு நல்ல தரமான காமெடி கலந்த திரில்லர் பேய் படமாக வெளி வர இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் எஸ்.டி. விஜய்மில்டன் வெளியிட்டார். விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தை தருண் பிரபு இயக்கியிருக்கிறார். வசந்த் மற்றும் பிரகாஷ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.