‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’ : யுவன் – அனிருத் அசத்தல் கூட்டணி

Get real time updates directly on you device, subscribe now.

anirudh

நிஜக் காதலர்களாக வலம் வரும் ஜெய் – அஞ்சலி ஜோடியின் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் தான் ”பலூன்”.

அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்கியிருக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

யுவன் இசை என்றாலே இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி விடும். இப்போது இந்தப்படத்தில் அனிருத்தும் இணைந்திருப்பது இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என நம்பப்படுகிறது.

Related Posts
1 of 18

”பலூன்’ படத்தின் ஒரு பாடலிற்கான விவாதத்தில் நானும் அதன் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜா இருந்தபொழுது ஓவியாவின் பிரபலமான ‘நீங்க shut up பண்ணுங்க’ என்ற வரி எங்களுக்கு தோன்றியது. இந்த யோசனையை யுவனிடம் கூறியபொழுது அவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. இதனை அனிருத் பாடினால் அசத்தலாக இருக்கும் என்று கூறினார். இது குறித்து தயக்கத்துடன் நான் அனிருத்தை அணுகியபொழுது அவர் மறு யோசனையின்றி உடனே பாட சம்மதித்தார்.

யுவனும் அனிருத்தும் ஒன்று சேர்ந்து எந்த வித ஈகோவும் இன்றி ஒன்று சேர்ந்து பணியாற்றி கலக்கியுள்ளனர். அவர்கள் இருவரிடையே ஒருவர் மீது மற்றொவர் வைத்திருக்கும் மரியாதை அழகாக இருந்தது. இவர்கள் இருவரின் இந்த அழகான நட்பு இப்பாடலின் தரத்திலும் குதூகலத்தில் வெளிப்பட்டது. இந்த ‘நீங்க shut up பண்ணுங்க’ பாடல் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று கொண்டாடப்படும் என உறுதியாக நம்புகிறேன்.

இப்பாடலின் ப்ரோமோ வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியிடவுள்ளோம். இப்பாடல், திறமை கொண்ட, சாதித்த இரு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பணிபுரிய முடியாது என கூறுபவர்களை ‘shut up பண்ணுங்க’ என்பதை உணர்த்தும். இப்படத்தின் மற்றொரு பாடலான ‘மழை மேகம் நீயாட’ யுவனின் v பிறந்தநாளான வரும் 31 ஆம் தேதி அன்று வெளியிடவுள்ளோம்” என்றார் இயக்குனர் சினிஷ்.