பேமிலி பேக்ட்ராப்ல ஒரு கலர்ஃபுல்லான படம்! : மிஸ் பண்ணிடாதீங்க மாடர்ன் யூத்ஸ்
2014ம் ஆம் ஆண்டு ரிலீசாகி மலையாள திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய படம் ‘பெங்களூர் டேஸ்’.
பெண் இயக்குநரான அஞ்சலி மேனன் இயக்கி வரவேற்பையும் , வசூலையும் பெற்ற இந்தப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய கடும் போட்டி!
தெலுங்கில் ராணா ரீமேக் செய்ய ஆசைப்பட, அதற்கு முன்பாகவே தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கி போட்டு விட்டது பிரபல தயாரிப்பு நிறுவனமான பி.வி.பி சினிமா. இருந்தாலும் இப்போதைக்கு தமிழில் மட்டும் ‘பெங்களூர் நாட்கள்’ என்ற பெயரில் தயாரித்திருக்கிறார்கள்.
தெலுங்கில் ‘பொம்மரில்லு’ என்ற பிரம்மாண்ட வெற்றிப் படத்தைக் கொடுத்த பாஸ்கர் தான் இந்தப் படத்தை தமிழில் இயக்கியிருக்கிறார்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் தெலுங்கில் அமைந்து விட்டதால் ஹைதராபாத்திலேயே செட்டிலாகி விட்டவருக்கு சொந்த ஊரே தமிழ்நாட்டிலுள்ள வேலூர் தானாம்.
குகன் ஒளிப்பதிவில் ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்க, ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, சமந்தா, பார்வதி, லட்சுமி ராய், சரண்யா பொன்வண்ணன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு எடுத்து முடித்திருக்கிறார் பாஸ்கர்.
”என்னோட வாழ்க்கை தமிழ்நாட்டுல ஆரம்பிச்சு அது எப்படி என்னை ஆந்திராவுக்கு கொண்டு போச்சுங்கிறதெல்லாம் தெரியாது. ஆனா நான் அங்க போய் படம் பண்ண ஆரம்பிச்சதும் தொடர்ந்து அடுத்தடுத்து படம் பண்ண வேண்டிய சூழல் வந்தது. அதனாலேயே நான் தமிழ்ல படம் பண்றது தள்ளிப்போய்க்கிட்டே இருந்துச்சு.
பி.வி.பி.சினிமாஸ்ல இருந்து என்னைக் கூப்பிட்டு ‘பெங்களூர் டேஸ்’ ரீமேக்கை நீங்க பண்ணனும்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஒரு நல்ல தயாரிப்பு நிறுவனம் கெடைக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். அந்த வகையில பி.வி.பி சினிமாஸ் கெடைச்சது என்னோட அதிர்ஷ்டம்.
நண்பர்களைப் பத்தின படங்கள் நாம நெறைய பார்த்திருக்கிறோம், மூன்று உறவினர்களைப் பத்தின கதை இது. அதுதான் என்னை ரொம்ப ஈர்த்தது. எல்லாருக்குமே உறவினர்கள் இருப்பாங்க, நானும் அந்த சூழல்ல வளர்ந்த ஆள் தான். ஏன்னா எங்க ஊர் வேலூர்ல எங்க வீட்டைச் சுத்தி என்னோட சொந்தக்காரங்க தான் இருப்பாங்க.
உறவினர்களோட வாழ்க்கையை அடையாளப்படுத்திய நல்ல விஷயம் இந்தக் கதையில இருக்கு. ஒரு ஃபேமிலி பேக்ட்ராப்ல, இளைஞர்களுக்கான கலர்ஃபுல்லா இருக்கும் என்றார்.
உலகம் முழுவதும் சுமார் 500 தியேட்டர்களில் ரிலீசாகும் இப்படத்தின் வெற்றியும் சந்தேகமே வேண்டாம்.
கலர்ஃபுல்லா தான் இருக்கும்!