சக ஹீரோக்களுக்கு ஆர்யா க்ரீன் சிக்னல்

Get real time updates directly on you device, subscribe now.

‘மெளனகுரு’ வெற்றிக்குப் பிறகு பல ஆண்டுகள் மெளனமாகவே இருந்த இயக்குனர் சாந்தகுமார் தற்போது ஆர்யாவை ‘மகாமுனி’யாக மாற்றி ரசிகர்கள் முன்னால் நிறுத்த தயாராகி விட்டார்.

இந்துஜா, மஹிமா நம்பியார் இருவரும் நாயகிகளாக நடித்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார்.

செப்டம்பர் 6-ம் தேதி ரிலீசாகும் இப்படத்தைப் பற்றி ஆர்யாவிடம் கேட்டபோது, ”இப்படத்தில் நான் கார் டிரைவர், கொலையாளி என்று இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு சைக்கிள் ஓட்டுவதில் எப்போதுமே ஆர்வம் உண்டு. அந்த ஆர்வம் தான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை எனக்குப் பெற்று தந்தது.

Related Posts
1 of 144

மிகவும் அழுத்தமான கதையம்சத்தோடு இந்தப்படம் தயாராகியிருக்கிறது. மேலும் இந்தப் படத்தில் நான் ஒரு சிறுவனுக்கு அப்பாவாகவும் நடித்து இருக்கிறேன்.

செப்டம்பர் மாதத்தில் நான் நடித்துள்ள மகாமுனி, காப்பான் ஆகிய 2 படங்களும் வெளியாவது மகிழ்ச்சியாக இருக்கிறது. காப்பான் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளேன். அதேபோல இனி தொடர்ந்து இரண்டு, மூன்று கதாநாயகர்கள் படங்களில் சக ஹீரோக்களுன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன்.” என்றார்.