ஹைய்யா… மீண்டும் நடிக்க வந்துட்டார் ‘ஊதாக்கலரு ரிப்பன்’
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா.
தொடர்ந்து ‘ஜீவா’, ‘காக்கி சட்டை’, ‘மருது’ உட்பட பல படங்களில் நடித்தார்.
”சங்கிலி புங்கிலி கதவத் தொற” படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 2 வருடங்கள் அவரை எந்தப் படத்திலும் பார்க்க முடியவில்லை.
எங்கப்பா போனார்? அந்த ‘ஊதாக்கலரு ரிப்பன்’ என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக இருந்தது.
விடை தெரியாமல் தவித்த ரசிகர்களுக்கு ”இதோ வந்துட்டேன்…” என்று பதில் கொடுத்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா.
ஆமாம், விஜய் மில்டன் இயக்கத்தில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.
பிரபல தெலுங்கு ஹீரோவான அல்லு சிரீஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்தப் படத்தில் தான் 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நாயகியாக ரீ-எண்ட்ரி கொடுக்கிறார் ஸ்ரீ திவ்யா.
முன் தயாரிப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, வரும் டிசம்பர் மாதத்தில் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 2020 படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
விஜய் மில்டனே ஒளிப்பதிவு செய்து இயக்கும் இப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார். இன்பினிட் பிலிம் வெஞ்சர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப், பங்கஜ் ஆகியோர் தயாரித்து வருகிறார்கள்.