பயமறியா பிரம்மை- விமர்சனம்
“வேண்டா வெறுப்புக்கு பிள்ளபெத்து காண்டாமிருகம் பேரு வச்சாங்களாம்” என்று ஒரு பழமொழி உண்டு ஊரில். எதுக்கு இதைச் சொல்றோம்னா.. கதையைப் படிங்க
கொன்னு கொன்னு ரசிக்கும் ஒரு கொலைகாரன். அவனின் கதையை எழுத ஜெயிலில் வந்து பேசுகிறார் ஒரு எழுத்தாளர். அந்தக் கொலைகாரன் தான் செய்த கொலைகளை விவரிக்கிறான். அவையெல்லாம் காட்சிகளாக விரிகின்றன. காட்சிக்கு காட்சி ரத்தம் தெறிக்கிறது. திரையில் இருந்து நம் மீதும் ரத்தம் தெளிப்பது போன்ற உணர்வு.. கொடுமைடா
ஹீரோ கொடுத்த வேலைக்கு பெரிதாக குறை வைக்கவில்லை. குரு சோமசுந்தரம் தனது முத்திரைப் பதிக்கும் நடிப்பை வழங்கியுள்ளார். விஷ்வாந்த், வினோத் சாகர், ஹரிஷ் உத்தமன் என ஏனைய கேரக்டர்கள் எல்லோரும் நடிப்பில் குறை வைக்கவில்லை
கேமராமேன் வித்தியாசமாக காட்டுகிறேன் என்ற பெயரில் பல கொடூரமான ப்ரேம்லாம் வைத்திருக்கிறார். அவரும் கேமராவிற்குள் கொஞ்சம் ரத்தம் தெளித்து தான் வேலையைத் துவங்கியிருப்பார் போல.கே பின்னணி இசையை ஓகேவாக்கி உள்ளார்
கதை தான் சமுதாயக் கேடு என்றால் திரைக்கதை படுமோசம். அத்தனை கொலைகள் செய்தவன் எப்படி போலீஸிடம் சிக்காமல் 25 வருடங்களை கழித்தான் என்ற டீடைல்ஸ் துளி கூட படத்தில் இல்லை.
சுத்தமாம மண்டையை கழுவி வைத்துவிட்டு பார்த்தால் கூட படம் நம்மை சோதிக்கும்
2/5