ரசிகர்களுக்கு தனுஷ் கொடுத்த அட்வைஸ்
ஜூலை 28 தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா, செயலாளர் பி.ராஜா ஆகியோர் தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் ஜூலை 27-ம் தேதி சென்னையில் உள்ள ஏ.சி.எஸ் மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது.
முகாமில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை போன்ற பகுதிகளில் இருந்து ரசிகர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் ஒரே இடத்தில இவ்வளவு ரசிகர்கள் இணைந்து இரத்ததானம் செய்வது இதுவே முதல்முறை .
இரத்ததான முகாமை, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு , டி.ஜி. தியாகராஜன், தனுஷின் பெற்றோர்கள் கஸ்தூரி ராஜா & விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா , எஸ். வினோத் குமார் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவங்கி வைத்தனர். விழாவில் நடிகர் தனுஷ், அவருடைய மனைவி ஐஸ்வர்யா தனுஷ், மற்றும் கென் கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் .
விழாவில் பேசிய கலைப்புலி எஸ். தாணு “1500 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இணைத்து ரத்ததானம் செய்வதை இப்போது தான் முதல்முறையாகப் பார்க்கிறேன் என மகிழ்ச்சியுடன் பேசினார்
பின்னர் பேசிய நடிகர் தனுஷ் ”இரத்த தானம் செய்த உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். கலந்து கொண்ட அனைவருக்கும் மிகவும் நன்றி . அனைவரிடமும் அன்பை மட்டும் செலுத்துவோம்” என அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார் .