பீஸ்ட்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

வெறும் கோலமாவை வச்சே மாஸ் காட்டிய நெல்சன் பெரியமால் கிடைச்சும் கோட்டை விட்டிருக்கார். ரா உளவாளி விஜய்க்கு ஒரு டெரரிஸ்ட் ஆபரேஷன் மூலம் சைக்காலஜிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் வேலையை விட்டு விலகி பூஜாஹெக்டேயுடன் டூயட் பாடுகிறார். இந்நேரத்தில் ஒரு மால் தீவரவாதிகளால் ஹைஜாக் செய்யப்படுகிறது. விஜய் ஜேம்ஸ்பாண்ட் போல் மாலையும் அங்கிருக்கும் மக்களையும் காப்பாற்றுவதே கதைக்களம்

கேட்கவே நல்லாருக்குன்னு சொல்ற கதையை கேட்க மட்டும் தான் நல்லாருக்கு என்று சொல்ல வைத்துவிட்டார் இயக்குநர் நெல்சன். பெரிய புரொடக்‌ஷன் கம்பெனி, பெரிய ஹீரோ கிடைத்தும் கவனத்தை கதையில் வைக்கவில்லை நெல்சன். படத்தில் ஒரே ப்ளஸ் விடிவி கணேஷ் காமெடி மட்டுமே. விஜய் ஆக்‌ஷன் சீக்வென்ஸில் அசத்தியிருக்கிறார். பூஜா ஹெக்டே அழகாக இருக்கிறார். செல்வராகவன் கேரக்டர் படத்திற்கு துளியும் உதவவில்லை.

படத்தில் இல்லாத பரபரப்பை இசையில் கொண்டு வந்து ஓரளவு டெம்போ கொடுக்கிறார் அனிருத். கேமராமேனின் உழைப்பும் அபாரம். முக்கியமாக ஹலமதீ ஹபி பாடலில் ப்ரேமிங் நச். அன்பறிவ் சண்டைக்காட்சிகள் எல்லாமே மிரட்டல் ரகம்

படத்தின் ஆகப்பெரும் பிரச்சனையே படத்தை நம்மோடு ஒன்ற விடாத திரைக்கதைதான். எந்தக் கேரக்டரோடவும் நம்மால் கனெக்ட் ஆகவே முடியவில்லை என்பது பெரும்சோகம். விஜய் ரசிகர்களையும் சில சீக்வென்ஸ்கள் பேமிலி ஆடியன்ஸையும் வேண்டுமானால் திருப்தி படுத்தலாம். மற்றபடி பீஸ்டில் துளியும் பூஸ்ட் இல்லை

2/5