வாரிசு- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதை எவ்வித அலட்டல் உருட்டல் மிரட்டல் இல்லாமல் மெதுவாக பேசியிருக்கும் படம் வாரிசு

மிகப்பெரிய பிஸ்னெஸ் மேன் சரத்குமாருக்குப் பிடிக்காத மகன் விஜய். மற்ற இரு மகன்களை கொண்டாடும் சரத் ஒரு கட்டத்தில் தன் இளைய மகன் விஜய்யிடம் வந்து நிற்க வேண்டிய ஒரு சூழல் வருகிறது. அந்தச் சூழலுக்கான காரணம் என்ன? என்பதை வம்சி துவம்சப்படுத்திச் சொல்லியிருக்கிறார்

விஜய் வழக்கம் போல் ஆட்டத்தில் துள்ளல், வசனங்களில் எள்ளல் என அசத்துகிறார். சரத்குமாரின் கம்பீரம் மற்றும் இயலாமை கலந்த நடிப்பு கவர்கிறது. ராஷ்மிகா பாடல்களுக்காக மட்டுமே. யோகிபாபு பல இடங்களில் ஆறுதல் அளிக்கிறார். பிரகாஷ்ராஜ், சாம், ஸ்ரீகாந்த், பிரபு ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்துள்ளார்கள்
எஸ்.ஜே சூர்யா சிறப்புத் தோற்றத்தில் வந்து சிறப்பு செய்துள்ளார்

கார்த்திக் பழனியின் கேமரா விஜய்யை மட்டுமல்ல படத்தில் உள்ள அனைவரையும் அழகாக காட்டியுள்ளது. தமனின் இசையில் தியேட்டர் ஆட்டம் போடுகிறது.

மிக மிக ஸ்லோவான திரைக்கதை படத்தை ரொம்பவே சோதிக்கிறது. என்னதான் விஜய்யின் க்யூட்னெஸ்களை ரசித்தாலும் இவ்வளவாப்பா இழுப்பீங்க என்றே தோன்றுகிறது. அடுத்தக் காட்சி இதுதான் என்று யூகித்தால் கூட பரவாயில்லை. படத்தின் இறுதிக்காட்சியை கூட முதலிலே யூகிக்க முடிவது பெரிய மைனஸ். வாரிசு வாரியணைக்க தவறிவிட்டார்
2.5/5