லியோ- விமர்சனம்
லோகேஷ் விஜய் கூட்டணி லோ கேட்டகிரியா? விமர்சனத்திற்குள் செல்வோம்
தந்தையை கொல்ல நினைக்கும் மகன். மகனை மகன் தான் என ஒத்துக்க வைக்க துடிக்கும் தந்தை. என்ன பாஸ் இதான் கதையா? யெஸ் கதையின் அடிநாதம் இதுதான். மகனையே ஏன் மகன் என ஒத்துக்க வைக்க சஞ்சய் தத் துடிக்கிறார். அந்தத் தந்தையைக் கொலை செய்யும் முடிவுக்கு மகன் ஏன் வருகிறார் என்பதெல்லாம் கதையின் மிச்சசொச்சங்கள்
தான் நடிக்கும் படம் எவ்வளவு திராபையாக இருந்தாலும் அதில் தன்னால் முடிந்த அளவிற்கு பலம் சேர்ப்பவர் விஜய். இந்த லியோவையும் தன் தோளில் சுமந்துள்ளார் மனிதர். மிரட்டலான ஆச்ஷன், கலங்க வைக்கும் எமோஷ்னல் என நேர்த்தியான விஜயை லியோவில் பார்க்கலாம். திரிஷாவின் முதிர்ச்சியான நடிப்பும் படத்தின் பலம். சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி, கெளதம் மேனென் ஆகியோர் நன்றாகவே நடித்திருந்தாலும் மனதில் பதியும்படி அவர்களின் கேரக்டர்கள் எழுதப்படவில்லை
இந்தக் கூட்டத்தில் சின்னதாக கவனம் ஈர்ப்பது மடோனா செபாஸ்டின் மட்டுமே!
மனோஜ் பரமஹம்சாவை இந்தப்படத்தின் பெரும்பலம் என அறிவிக்கலாம். காஷ்மீரின் வேறோர் அழகை கண்முன் நிறுத்தியுள்ளார். அனிருத்தின் இசையில் பாடல்கள் மட்டும் ஓகே. பின்னணி இசையில் இன்னும் தரம் இருந்திருக்கலாம். அன்பறிவ் மாஸ்டர்ஸின் ஸ்டண்ட் கூட்டணி படத்தை பக்கா ஆக்ஷன் பேக்கேஜாக மாற்றியுள்ளது
மிகவும் பழைய கதை. ஆனால் புதிய ட்ரீட்மெண்ட் என லோகேஷ் முடிவெடுத்து இயக்கியுள்ளார். ஆனால் புதிய ட்ரீட்மென்ட் எதுவுமே வொர்க்கவுட் ஆகவில்லை என்பதே நிஜம். முதல்பாதியில் சின்னச்சின்ன பில்டப்போடு பயணிக்கும் படம் இண்டெர்வெல்லில் நல்ல ஹைப் கொடுத்து கம்பீரமாக நிற்கிறது. இரண்டாம் பாதியில் அப்படியே திக்கு தெரியாமல் பயணித்து ஒரு கட்டத்தில் படம் படுத்தே விடுகிறது. பெட்டரான மேக்கிங் கொடுத்துள்ள லோகேஷ் அட்டகாசமான எமோஷ்னல் கனெக்டிங்கை கொடுக்கத் தவறியதால் லியோ அய்யோவென தடுமாறி நிற்கிறது
Then விஜய் பேன்ஸ் எல்லாருக்கும் fire விடும் மொமெண்ட்ஸ் படத்தில் இருக்கு. அவர்களுக்கு அதுபோதும் தானே
2.75/5