பாலா படத்தில் கோலிவுட் எண்ட்ரி! – ‘வர்மா’ நாயகி செம ஹேப்பி

Get real time updates directly on you device, subscribe now.

‘நாச்சியார்’ பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா, நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் “வர்மா” படத்தை இயக்கி வருகிறார்.

படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே பலரின் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் “வர்மா” படத்தின் கதாநாயகி மேகா.

பெங்காலி மொழியில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் தற்போது தமிழ் திரையுலகிற்கு வர்மா படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

Related Posts
1 of 7

கதக் நடனம் முறையே கற்ற இவர், இயக்குனர் பாலாவின் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாவதில் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார்.

இப்படத்தை பாலாவின் பி ஸ்டுடியோஸ் வழங்க இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரித்து வருகிறது.