திருட்டு டிவிடிக்கு ஆப்பு : புதுத் திட்டத்தோடு ரிலீசாகிறது சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’!

Get real time updates directly on you device, subscribe now.

remo

ண்டை மாநிலங்களைப் பாருங்கள் எந்த ஒரு புதுப்படத்துக்கும் அவ்வளவு எளிதில் திருட்டு டிவிடி வெளியாவதில்லை. மீறி ஏதாவது ஒன்று வெளியானாலும் ஒட்டுமொத்த சினிமா உலகத்தினரும் ஒன்று சேர்ந்து பெரும் போராட்டம் நடத்தி அதற்கு ஆப்பு வைக்கிறார்கள்.

ஆனால் தமிழ் சினிமாவில் அப்படியில்லை. இங்குள்ளவர்கள் மத்தியில் ஒற்றுமையில்லை. அதைப்பயன்படுத்தி திருட்டு டிவிடி கும்பல்கள் புதுப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு கல்லா கட்டி வருகின்றனர்.

இதனால் தமிழ்சினிமா தயாரிப்பாளர்களுக்கு பெரும் பண இழப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் ஒரு புதுப்படத்தின் வெளிநாட்டு உரிமைகளைக் கொடுக்கும் போது தான் அதன் திருட்டு டிவிடி வெளியாவது என்பது திரையுலகினர் மத்தியில் பல ஆண்டுகளாக பேசப்படும் விஷயம்.

இதை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தான் தயாரித்து வரும் ‘ரொமோ’ படத்தின் திருட்டு டிவிடிக்கு எதிராக ஒரு புதிய செயல் திட்டத்தை கொண்டு வருகிறாராம்.

Related Posts
1 of 43

ஆமாம், 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் தயாராகும் ‘ரெமோ’ படத்தை முதலில் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்து விட்டு அதன் பிறகே வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யப் போகிறாராம்.

” இது எங்கள் 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் கொள்கை. புதிய படங்கள் இணையதளங்களில் வெளியாவதை தவிர்ப்பதே முதல் நோக்கம். அதன்படி ரெமோ தமிழகத்தில் அக்டோபர் 7-ல் வெளியாகிறது. இங்கு முதல் காட்சி திரையிடப்பட்ட பின்னரே வெளிநாட்டில் வெளியாகிறது” என்று அறிவித்திருக்கிறார்.

மேலும், இணையத்தில் திருட்டுத்தனமாக படங்களைப் பார்ப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வித்திருக்கிறது மும்பை நீதிமன்றம். அதற்கு “மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்தியாவிலும் காப்புரிமை சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். காப்புரிமை மீறல் பிரச்சினைகளில் சிறு குழுகளையோ தனி நபர்களையோ தண்டிப்பதில் மட்டும் எந்த பயணும் இல்லை. சட்டம் திருத்தப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும்” என்றும் திருட்டு டிவிடிக்கு எதிராக தனது ஆணித்தரமான கருத்தை கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் ராஜா.

சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டு பாடல்களை ஏற்கனவே வெளியான நிலையில் விரைவில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரும் வெளியாக இருக்கிறது. வருகிற அக்டோபர் 7ம் தேதி ‘ரெமோ’ வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

நம்பிக்கை வெல்லட்டும்!