39 வயதில் தெலுங்கு சினிமாவில் எண்ட்ரி போடும் வித்யாபாலன்!

Get real time updates directly on you device, subscribe now.

னது 39-வது வயதில் தெலுங்கு சினிமாவில் எண்ட்ரி கொடுக்கிறார் பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன்.

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும் இன்றளவும் பல நடிகர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்பவர் என்.டி.ராமராவ்.

இவருடைய வாழ்க்கை வரலாறு பெரும் பொருட்செலவில் மிகப்பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கப்படுகிறது.

‘என்.டி.ஆர் பயோபிக்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கின்றார். இந்த படத்தில் தான் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் கேரக்டரில் நடிக்கிறார் இந்தி நடிகை வித்யாபாலன்.

அவர் நடிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதால் ஏற்கனவே இருந்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் கூடியுள்ளது.

கிருஷ் இயக்கும் இப்படத்தை நந்தமுரி பாலகிருஷ்ணா தயாரிக்க உடன் சாய் கோரப்பட்டி, விஷ்ணு வர்தன் இந்தூரி இணைந்து தயாரிக்கின்றனர்.