‘தரமணி’ ஹீரோவுக்கு வில்லனாக மாறிய பாரதிராஜா!

Get real time updates directly on you device, subscribe now.

ராம் இயக்கத்தில் வெளியான ‘தரமணி’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் வசந்த் ரவி.

அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் இரண்டாவது படம் ‘ராக்கி’.

Related Posts
1 of 11

அருண் மாதேஸ்வரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்தப் படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார்.

இதில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் நடிக்கிறார். பாரதிராஜா ஏற்கனவே ‘பாண்டிய நாடு’ படத்தில் பயந்த சுபாவம் கொண்டவராகவும், ‘குரங்கு பொம்மை’ படத்தில் அப்பாவியான பெரியவராகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். அந்தப் படங்களைத் தொடர்ந்து இப்படத்தில் ஹீரோ வசந்த் ரவிக்கு வில்லனாக நடிக்கிறார் பாரதிராஜா.