ஓவியாவின் சிரிப்புக்கு பின்னால் இருக்கும் சோகம்? : படித்துப் பாருங்கள்… கலங்கிப் போவீர்கள்!
சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் ‘பிக்பாஸ்’ வீட்டிலிருந்து வாரா வாராம் யார் வெளியேற்றப்படுவார் என்பது செம த்ரில்லிங்காக போய்க்கொண்டிருக்கிறது.
என்னதான் அந்த வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொரு வாரமும் நடிகை ஓவியாவை வெளியேற்ற பிக்பாஸிடம் பரிந்துரை செய்தாலும், வெளியிலிருந்து ஆதரவு தரும் ரசிகர்கள் அவரை தொடர்ந்து காப்பாற்றி பிக்பாஸ் வீட்டுக்குள் உட்கார வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தளவுக்கு தனது வெள்ளந்தியான சிரிப்பிலும், வெளிப்படையான பேச்சினாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து அவர்களின் ஃபேவரைட் ஸ்டாராக மாறியிருக்கிறார் ஓவியா.
என்ன தான் அந்த நிகழ்ச்சியில் ஓவியா எப்போதுமே சிரிப்பு முகமாகவும், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாகவும் காட்சியளித்தாலும் அவரின் நிஜ வாழ்க்கையில் தாங்க முடியாத சோதனையை கடந்து வந்தவர் என்பது பெரும்பாலும் யாருக்கும் தெரியாத உண்மை.
சில வருடங்களுக்கு முன்பு கேன்சர் நோயால் தாக்கப்பட்ட அம்மாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு முழுவதும் ஓவியாவுக்கு ஏற்பட்டது. அந்த இக்கட்டான நிலையில் யாருமே அவருக்கு உதவ முன் வரவில்லை. பணத்தேவை அதிகமாக இருந்த அந்த நேரத்தில் தனது அம்மாவை எப்படியாவது கேன்சர் நோயிலிருந்து காப்பாற்றி விட வேண்டுமென்று நினைத்தவர் இந்தப் படத்தில் நடித்தால் தனக்கு பெயர் கிடைக்காது என்று தெரிந்தும் கூட பல படங்களை கமிட் செய்து நடித்தார்.
அந்தப் படங்களில் கிடைத்த பணத்தை வைத்து தன்னால் முடிந்த அளவுக்கு தரமான சிகிச்சை அளித்து அம்மாவை காப்பாற்ற போராடியிருக்கிறார். ஆனாலும் அவருடைய அம்மா சிகிச்சை பலனின்றி இறந்து போய் விட்டார்.
அதனால் ரொம்பவே உடைந்த போன ஓவியா அதிலிருந்து மீண்டு வந்து எல்லா குடும்பப் பொறுப்புகளை தன் மேல் போட்டுக்கொண்டு படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
கைவசம் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஐந்து படங்களை வைத்திருக்கும் ஓவியாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பு காரணமாக மீண்டும் தமிழ்சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று இப்போதே கோலிவுட் வாலாக்கள் கணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.