மீண்டும் ஓவியா வாழ்க்கையில் விளையாடும் ஆரவ்!

Get real time updates directly on you device, subscribe now.

‘பிக்பாஸ் சீசன் ஒன்று’ நிகழ்ச்சியில் பங்கெடுத்த போது ஆரவ்வை துரத்தி துரத்தி காதலித்தார் ஓவியா.

மருத்துவ முத்தம் கொடுத்தார், நீயே என் உயிர் என்றார். ஆனால் ஆரவ்வோ ஓவியாவுக்கு வெளியே ரசிகர்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு தெரியாமல் அவருடைய காதலை ஏற்க மறுத்தார்.

இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஓவியா முக்கால்வாசி நிகழ்ச்சியின் போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். வெளியே வந்த பிறகும் ரசிகர்களை சந்தித்த அவர் ”ஐ லவ் ஆரவ்” என்றார்.

அதன் பின்னர் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று ”நான் இப்போது சிங்கிளாக இருக்கிறேன், சந்தோஷமாக இருக்கிறேன்” என்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழால் புதுப்பட வாய்ப்புகளும், பல விளம்பரப்பட வாய்ப்புகளும் ஓவியாவைத் தேடி வந்தது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ஒளிபரப்பாகி வரும் சூழலில் இன்னும் ஓவியா நடிப்பில் ஒரு படம் கூட தமிழில் வெளியாகவில்லை.

இதற்கிடையே ஓவியாவுடன் மீண்டும் நெருக்கம் காட்ட ஆரம்பித்திருக்கிறார் ஆரவ்.

Related Posts
1 of 8

சமீபத்தில் ஓவியாவும், ஆரவ்வும் பாங்காங் நாட்டில் ஒன்றாக கை கோர்த்து நடந்து செல்வது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.

இதைப்பார்த்ததும் அப்செட்டான ஓவியா ஆர்மிகள் ”உங்களுக்கு ஆரவ் வேண்டாம் ஓவியா, அவன் பக்கா பிராடுமா என்று எச்சரித்துள்ளனர். அதே சமயம் அதே ஓவியா ஆர்மியில் உள்ள சிலரோ ”ஜோடிப்பொருத்தம் சூப்பர்” என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த புகைப்படம் பழையது என்றும், ஓவியாவுடன் எனது நண்பர்களும் இணைந்து விடுமுறைக்காக பாங்காக் சென்ற போது எடுக்கப்பட்டது என்றும் கூறியிருக்கிறார். மேலும் நானும் ஓவியாவும் நல்ல நண்பர்கள் மட்டுமே, எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை’ என்றும் தெளிவு படுத்தியிருக்கிறார்.

என்ன தான் தனக்கும் ஓவியாவுக்குமிடையே இருப்பது காதல் அல்ல, நட்பு மட்டும் தான் என்று ஆரவ் சொன்னாலும் இப்படி இருவரும் அடிக்கடி ஊர் சுற்றுவதைப் பார்க்கும் டைரக்டர்கள் ஓவியாவை தங்களது படங்களில் ஹீரோயினாக கமிட் செய்ய யோசிக்கிறார்கள்.

ஏற்கனவே காதலை ஏற்க மறுத்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் பிக்பாஸ் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்த ஓவியாவின் வாழ்க்கையில் தற்போது மீண்டும் ஆரவ்வின் எண்ட்ரியால் சினிமாவில் புதுப்பட வாய்ப்புகளை இழந்து வருகிறார் ஓவியா.