‘விஸ்வாசம்’ படத்தோடு மோதும் அஜீத் ரசிகர் படம்!

Get real time updates directly on you device, subscribe now.

ஜீத் ரசிகராக தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கும் ‘பில்லா பாண்டி’ திரைப்படம் தீபாவளி அன்று ரிலீசாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்தலப்பட்டி எனும் ஊரில் ‘பில்லா பாண்டி’ படத்தின் கதை நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஊரின் பெயரிலேயே ‘தல’ இருப்பதாலோ என்னவோ, அந்த ஊரில் நடிகர் அஜித்திற்கு பல ரசிகர்கள்.

இப்படத்தின் தயாரிப்பாளரும், முக்கிய வேடத்தில் நடிப்பவருமான கே.சி. பிரபாத் ஒரு தல அஜித் ரசிகர். நடிகர் அஜித்தின் அருமை பெருமைகளையும், அவரது ரசிகர்களின் பண்புகளையும், தன்னார்வ தொண்டுகளையும் கூறும்விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது என்றும், ‘பில்லா பாண்டி’ படம் தீபாவளி அன்று திரைக்குவரவுள்ளதாகவும் தயாரிப்பாளர் கே.சி. பிரபாத் கூறினார்.

Related Posts
1 of 2

மேலும் இப்படத்தில் நடிகர் அஜித்தின் புகழ் பாடும் “எங்க குல தங்கம்” என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

‘பில்லா பாண்டி’ படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார். ‘மேயாத மான்’ இந்துஜா, சாந்தினி கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர் உள்பட பலர் நடிக்கின்றனர்.

சூரி கெஸ்ட் ரோலிலும், சிறப்பு தோற்றத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர். தீபாவளி அன்று தான் அஜித்தின் விஸ்வாசம் படமும் ரிலீசாகப் போவது குறிப்பிடத்தக்கது.