டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த வெப் சீரிஸை அறிவித்துள்ளது!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த வெப் சீரிஸில், இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நடிகர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தேசியவிருது வென்ற இயக்குநர் M.மணிகண்டன் இயக்குகிறார். இயக்குநர் M.மணிகண்டன் ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ போன்ற விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட, சூப்பர்ஹிட் படைப்புகளை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் சேதுபதி, தன் தனித்தன்மை வாய்ந்த நடிப்பின் வழியே, இந்தியா முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். இந்திய அளவில் புகழ்மிக்க நடிகராக விளங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழில் வெப் சீரிஸில் அவர் நடிப்பது இதுவே முதல் முறை. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் M.மணிகண்டன் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் பல மடங்கு எகிற வைத்திருக்கிறது.