‘பயாஸ்கோப்’ டீசரை வெளியிட்ட ஆர்யா, சசிகுமார்!

Get real time updates directly on you device, subscribe now.

பெரிதும் பாராட்டப்பட்ட ‘வெங்காயம்’ திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள படம் ‘பயாஸ்கோப்’. 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 3 அன்று வெளியாகிறது. டீசரை நடிகர்கள் ஆர்யா மற்றும் சசிகுமார் வெளியிட்டனர்.

Related Posts
1 of 6

சினிமா குறித்து எதுவும் தெரியாத கிராமத்து மக்கள் திரைப்படம் எடுக்கும் கலகலப்பான உண்மைக் கதையை திரையில் சொல்லும் ‘பயாஸ்கோப்’ திரைப்படத்தில் சத்யராஜ் மற்றும் சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் முக்கிய பாத்திரங்களில் தோன்றுகின்றனர். மேலும், இந்த உண்மைக் கதையில் அசலான கதை மாந்தர்களே அவரவர் வேடங்களை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘பயாஸ்கோப்’ திரைப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைக்க, முரளி கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டுக்காக புரொடியூசர் பஜார் நிறுவனத்துடன் சங்ககிரி ராஜ்குமார் கைகோர்த்துள்ளார். படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை ஆஹா பெற்றுள்ளது.