பிரம்மாண்டமாக நடைபெற்ற ’பிளாக்மெயில்’ இசை வெளியீடு!

Get real time updates directly on you device, subscribe now.

M/s. JDS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பிளாக்மெயில்’. ஆகஸ்ட் 1 அன்று வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “30 வருடங்களுக்கு முன்னால் ‘பிளாக்மெயில்’ என்ற இந்தி படம் பார்த்தேன். காதலன் வில்லனாக மாறும் கதை அது. அந்தப் படத்தின் ஈர்ப்பு இந்த ‘பிளாக்மெயில்’ படத்தில் பார்த்தேன். அந்த அளவுக்கு கதையும் ஒளிப்பதிவும் அருமையாக அமைந்துள்ளது. ஜிவி பிரகாஷ் அருமையாக நடித்துள்ளார். இளையராஜாவுக்கு அடுத்து அருமையான இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தான். தயாரிப்பாளர்கள் படம் முடியும்போதும் பெரும்பாலும் சோகமாக இருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். ஜிவி பிரகாஷால் ஒரு தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது பெருமையான விஷயம். படத்தின் ஹீரோ, ஹீரோயின் என எல்லோரும் வந்திருக்கும் ஆடியோ லான்ச் இதுதான் என நினைக்கிறேன். சாம் சிஎஸ் இசை அற்புதமாக வந்துள்ளது. படம் வெற்றிப் படமாக அமைய வாழ்த்துக்கள்”.

Related Posts
1 of 13

இயக்குநர் மாறன், “கதையை சுவாரஸ்யமாக படமாக்கி உள்ளோம். நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் தயாரிப்பாளர் அமல்ராஜ் இருவருக்கும் நன்றி. இவர்களுடன் பயணித்தது எங்கள் பாக்கியம். படத்தின் தொழில்நுட்பக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. த்ரில்லர் மட்டுமல்லாது செண்டிமெண்ட், காமெடி என ஜனரஞ்சகமாக படம் இருக்கும். நம் வீட்டிலேயே பிளாக்மெயில் உள்ளது. அதுபோல பாதிக்கப்பட்டவர்களின் கதையாக படம் இருக்கும். உங்கள் ஆதரவு தேவை. நன்றி”.

நடிகர் ஜிவி பிரகாஷ்குமார், “மாறன் திறமையான இயக்குநர். தயாரிப்பாளராக அறிமுகமாகும் அமல்ராஜ் சாருக்கு வாழ்த்துக்கள். நல்ல கதைகள் நிச்சயம் கவனம் பெறும். அதுபோல, ‘பிளாக்மெயில்’ படமும் பேசப்படும் என நம்புகிறேன். தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்ஸ்டாகிராமில் தேஜூவுடன் நடனம் ஆடியிருந்தேன். வைரல் ஆனது. அங்கிருந்துதான் இந்தப் படத்திற்கு தேஜூ கதாநாயகியாக தேர்வு ஆனார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.