‘கத்தி’ ஹிந்தி ரீமேக்கிலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ்!
தமிழில் விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கத்தி’ திரைப்படம் ஹிந்தியில் தயாராகப் போகிறது. இதற்காக ஹிந்தியில் அரை டஜன் படங்களில் நடித்து வரும் அக்ஷய்குமார் ஓ.கே சொல்லியிருக்கிறார்.
படத்தில் அக்ஷய் ஜோடியாக பல பாலிவுட் நடிகைகள் முன் வந்தும் யாரையும் ஏற்றுக் கொள்ளாமல் நிறைவாக பாகிஸ்தான் நடிகையும் வீஜேவுமான மாயா அலி என்பவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
இதனால் ஒட்டுமொத்த பாலிவுட் நடிகைகளும் ஏ.ஆர்.முருகதாஸ் மீது கடுப்பில் இருக்க, அவரோ எனக்கும் இந்தப் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டாராம்.
ஆமாம், தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினாலும் ஹிந்தியில் அவரது உதவியாளர் ஜெகன் சக்தி தான் கத்தியை இயக்கப் போகிறாராம்.
மகேஷ் பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு என இருமொழிப்படத்தில் வேலை இருப்பதால் வேறு வழியில்லாமல் இந்த வாய்ப்பை தனது உதவியாளருக்கு கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.