ப்ளூ ஸ்டார்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

தீண்டாமை தரும் கொடிய விளைவுகளை முன்னிறுத்தி, தீண்டாமையை எப்படித் தாண்ட வேண்டும் என்பதையும் விளையாட்டுக்களம் வழியே போதிக்கிறது ப்ளூ ஸ்டார்

அரக்கோணத்தில் ஊர் இளைஞர்களும், காலனி இளைஞர்களும் அவ்வப்போது முட்டிக்கொள்கிறார்கள். முட்டலுக்கு முக்கியமான காரணமாக சாதியம் இருக்கிறது. இரு பிரிவு இளைஞர்களும் கிரிக்கெட் ப்ளேயர்ஸ். இவர்களின் தொடர் மோதல் ஒரு இடத்தில் நட்பாக மாற, வேறோர் போர் துவங்குகிறது. முடிவில் சாதிப்பித்து ஒழிந்து சமுத்துவம் மலர்ந்ததா என்பதே படத்தின் மீதிக்கதை

ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் அணியின் கேப்டனான அசோக்செல்வன் அசத்தியுள்ளார். காதல் காட்சிகள், ஆக்சன் மூட், எமோஷ்னல் ஏரியா என அனைத்திலும் அதகளம் செய்துள்ளார். ஆல்பா அணியின் கேப்டனான சாந்தனு கதைக்குத் தேவையான சரியான நடிப்பை வழங்கியுள்ளார். அசோக்செல்வனோடு திடீர் நட்பு கொண்டாலும் ஒரு கட்டத்தில் சாதிய வன்மம் தலை தூக்கும் நேரத்தில் அவரின் நடிப்பு அல்டிமேட் ரகம். பக்ஸ் சிறப்பான கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார். நாயகி கீர்த்தி பாண்டியன் கொடுத்த கேரக்டரை பூர்த்தி செய்துள்ளார். படத்தில் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர் பிரித்வி தான். சில இடங்களில் படம் கலகலப்பாக நகர்வது அவரால் தான். நல்ல கதாப்பாத்திர வார்ப்பு. நல்ல நடிப்பு. வெல்டன் ப்ரோ! மேலும் படத்தில் தோன்றும் அனைவருமே கவனம் ஈர்த்துள்ளனர்.

கோவிந்த் வசந்தாவின் இசை கிரிக்கெட் விளையாட்டின் மாஸ் ஷாட்களுக்கு மவுசு கூட்டியதுள்ளது. பாடல்களும் கவனிக்க வைக்கின்றன. ஆங்காங்கே ஒலிக்கும் பழைய பாடல்களும் நம்மை 90 கால கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. ஒளிப்பதிவாளர் தமிழ் அ அழகன் தன் வேலையைச் சரியாகச் செய்துள்ளார். பரபரப்பான காட்சிகளில் அவர் கேமரா சுற்றி சுழன்றுள்ளது. எடிட்டர் இன்னும் கால் மணி நேரத்தை வெட்டியிருக்கலாம். இரண்டாம் பாதி இழுவையோ இழுவை

கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் அரசியலை வெளிப்படையாக பேசியதில் சில முக்கியமான படங்கள் இடம்பெற்றாலும் ப்ளூ ஸ்டார் கவனிக்கத்தக்க வகையிலே வந்துள்ளது. முன்பாதியில் கலகலப்பு பரபரப்பு கலந்து பயணித்த படம் இரண்டாம் பாதியிலும் அப்படியே பயணித்திருந்தால் ப்ளூ ஸ்டார் five ஸ்டார் வாங்கியிருக்கும்
3/5