பாபி சிம்ஹா – ரேஷ்மிமேனன் விவாகரத்தா? : தமாசு… தமாசு…
தமிழ்சினிமாவில் இது டைவர்ஸ் சீஸனோ தெரியவில்லை. வருகிற பரபரப்பு செய்திகளில் அடுத்தடுத்த டைவர்ஸ் செய்திகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
அமலாபால் இயக்குநர் விஜய் ஜோடி, ரஜினி மகள் செளந்தர்யா – அஸ்வின் ஜோடி ஆகியோரின் விவாகரத்து பரபரப்புகள் அடங்கி ஆறுவதற்குள் வந்து சேர்ந்தது பாபிசிம்ஹா – ரேஷ்மிமேனன் டைவர்ஸ் செய்தி.
உறுமீன் படத்தில் சேர்ந்து நடித்த போது காதலிக்க ஆரம்பித்த பாபிசிம்ஹாவும், ரேஷ்மிமேனனும் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். குடும்பத்தார் முன்னிலையில் திருப்பதியில் ஜாம் ஜாமென்று இவர்கள் திருமணம் நடந்தது.
திருமணமாகி ஓராண்டு கூட ஆகாத நிலையில் பாபி சிம்ஹா – ரேஷ்மி ஜோடி விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இந்த விவாகரத்துக்கு முக்கிய காரணம் பாபிசிம்ஹா மீதான போதை குற்றச்சாட்டு தான்.
மனுஷன் எந்த நேரமும் குடிபோதையில் இருப்பதாகவும், வீட்டுப்பக்கம் செல்வதே இல்லை என்றும் கூறப்பட்டது. அதோடு சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய பாபிசிம்ஹா அதையும் சரியானபடி நிர்வகிப்பதில்லை என்றும் சொல்லப்பட்டது.
என்னடா? இது தமிழ்சினிமா நட்சத்திரங்களுக்கு வந்த சோதனை என்று கன்னத்தில் கைவத்து எல்லோரும் கவலைப்பட்டிருக்க.., நீங்க கவலைப்படுற அளவுக்கு எதுவும் நடந்துடல என்று ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறது பாபி சிம்ஹா – ரேஷ்மிமேனன் ஜோடி.
நாங்கள் விவாகரத்து செய்யப்போவதாக வந்த செய்திகள் எல்லாமே வெறும் வதந்தி தான். அதனால் அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. அதை நினைத்து கவலைப்பட்டு எங்களுக்கு போன் செய்பவர்களுக்காக கூறுவது இது தான், நாங்கள் சந்தோஷமாக உள்ளோம். தற்போது நாங்கள் பிரிப்பது பீட்சாவை தான் என்று தமாசு தமாசு என்கிற தொணியில் கருத்து தெரிவித்திருக்கிறார் பாபிசிம்ஹா.