சென்சிடிவ்! : ஏ ஃபிலிம் பை கீதாஞ்சலி செல்வராகவன்

ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டுக்கு வரிசைகட்டும் ஏழெட்டு படங்களில் மாலை நேரத்து மயக்கம் படமும் ஒன்று!
இதுவரை வெளி டைரக்டர்களுக்கு கதை கொடுத்தே பழக்கப்பட்டிராத இயக்குநர் செல்வராகவன் தனது மனைவி கீதாஞ்சலிக்காக கொடுத்திருக்கிறார்.
ஆமாம், கீதாஞ்சலி செல்வராகவன் தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். செல்வராகவனின் எல்லாப் படங்களிலும் எடிட்டராக இருந்த கோலாபாஸ்கர் தனது மகனை ஹீரோவாக வைத்து தயாரித்திருக்கிறார். பாலகிருஷ்ணா கோலா நடிக்க, அவருக்கு ஜோடியாக வாமிகா நடிக்கிறார்.
இந்தக் கால யூத்துகளின் சீக்ரெட்டான ஏரியாக்களை படம் பிடித்துக் காட்டுவதில் கை தேர்ந்தவரான செல்வராகவன் இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதியிருக்கிறார்.
தனக்கே உரிய ஸ்டைலில் எழுதிய கதையில் சென்சிடிவ்வான விஷயங்கள் இல்லாமல் இருக்குமா? இதிலும் இருக்கிறது என்றவர் நிறைகளை மட்டும் எழுதி இந்த அறிமுகங்களை வளர்த்து விடுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார்.
சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி ஒரு மேடையில இரண்டு பசங்க அறிமுகமாக நின்னாங்க. அது நானும் என்னோட தம்பி தனுஷும் தான். அவங்களை எப்படி நீங்க வளர்த்து இன்னைக்கு இந்த லெவலுக்கு கொண்டு வந்து விட்டுருக்கீங்களோ? அதேமாதிரி இந்த அறிமுகங்களையும் நீங்க வளர்த்து விடணும் என்றார். அம்மா அப்பாவுக்கு அப்புறம் ஒரு ஸ்தானம் இருந்தா அதுல நீங்க தான் இருக்கீங்க. தட்ட வேண்டிய நேரத்துல தட்டி, கொட்டி, பாராட்ட வேண்டிய நேரத்துல பாராட்டுனதுல தான் நாங்க இந்த இடத்துல நிக்கிறோம்.
அதே மாதிரி தான் பத்திக்கிட்டு எரியிற மாதிரி வேகத்தோட ஹீரோ, ஹீரோயின், இயக்குநர், இசையமைப்பாளர் அம்ரித் என மாலை நேரத்து மயக்கம் படக்குழுவின் அறிமுகங்களை ஒவ்வொருவராக மீடியாக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
சரி சென்சிடிவ்வான விஷயம் என்று தெரிந்தும் ஏன் கீதாஞ்சலிக்கு இந்தக்கதையை இயக்கும் வாய்ப்பைப் கொடுத்தார் செல்வா?
அவரே சொன்னார்…
நம்ம தமிழ்சினிமாவுல பெண் இயக்குநர்கள்னாலே ஃபேமிலி, குழந்தைங்க சப்ஜெக்ட்னு இவைகளைத் தாண்டி எடுக்க முடியாத ஒரு எல்லைக்கோடு இருக்கு.
ஆன ஹாலிவுட்ல எல்லாம் அப்படியில்லை. அவங்க துணிச்சலா பல விஷயங்களை தங்களோட படங்கள்ல சொல்றாங்க. நான் இந்தக் கதையை எழுதின உடனே நான் இயக்குறேன்னு
கீதாஞ்சலி கேட்டப்போ நீங்க இதை சமாளிச்சிடுவீங்களான்னு கேட்டேன். நானும் லண்டன்ல படிச்ச பொண்ணுதான். கண்டிப்பா என்னால இயக்க முடியும்னு தைரியமா சொன்னாங்க, ஒரு பெண் ஷூட்டிங் ஸ்பாட்ல எவ்வளவு தூரத்துக்கு கஷ்டப்படுறாங்கன்னு என்னால அனுபவப்பூர்வமா உணர முடிஞ்சது. அவங்க ஷூட்டிங் போன உடனே நான் தான் வீட்ல இருந்து குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கிறது அவங்களை கவனிச்சிக்கிட்டு இருந்தேன். அது எனக்கு ரொம்ப புது அனுபவமா இருந்துச்சு, ஒரு மணி நேரத்து ஒரு தடவை ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து எனக்கு போன் பண்ணி குழந்தைகளைப் பத்தி அக்கறையோட விசாரிப்பார்.
இதுக்கு மத்தியில ஒரு பெண் இயக்குநராக ஜெயிக்கிறது பெரிய விஷயம். அப்படி ஒரு வெற்றி கீதாஞ்சலிக்கு கண்டிப்பா கெடைக்கும். அதுக்கு நீங்க எல்லாரும் கூட இருந்து சப்போர்ட் பண்ணனும் என்றார் செல்வராகவன்.
சரி அதென்ன சென்சிடிவ்வான விஷயம்?
ரிலீசுக்கு இன்னும் மூணு நாள் தானே இருக்கு? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க…