14 கெட்டப்புகளில் மிரட்ட வரும் பாபிசிம்ஹா!
கைவசம் அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார் பாபி சிம்ஹா.
தொடர்ந்து கமிட் செய்கிற படங்களில் தனது கேரக்டர் எந்தளவுக்கு ரசிகர்களிடம் போய்ச்சேர வேண்டும் என்று கவனத்தோடு இருக்கும் பாபி சிம்ஹா வல்லவனுக்கு வல்லவன் படத்துக்கு அதிகம் மெனக்கிட்டு வருகிறாராம்.
விஜய் தேசிங்கு இயக்கும் இப்படத்தில் சுமார் 14 வித்தியாசமான கெட்டப்புகளில் வறப்போகிறாராம்.
படத்தில் ஒரு நாடக கலைஞராக வருவதால் 14 வித்தியாசமான கெட்டப்புகள் பாபி சிம்ஹா போட்டே ஆக வேண்டிய கட்டாயம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் திண்டுக்கல் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அங்குதான் இந்த கெட்டப் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன.
கருணாகரனும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில காட்சிகளில் ஒன்றிரெண்டு பாடல் காட்சிகளை எடுத்தால் ஓவர்.
ஏற்கனவே இறைவி, கோ2 ஆகிய படங்களை முடித்த பாபிசிம்ஹா அடுத்து ஜீவா ஹீரோவாக நடித்து வரும் ‘கவலை வேண்டாம்’ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
