அரவிந்த்சாமி தான் வேணும்! : செண்டிமெண்ட்டில் சிக்கிய ஜெயம்ரவி

Get real time updates directly on you device, subscribe now.

arvinthsamy

டிக்கிற மூடிலேயே இல்லாத அரவிந்த்சாமிவை தனி ஒருவன் படத்தில் ஜெயம்ரவிக்கு வில்லனாக்கினார் இயக்குநர் மோகன்ராஜா.

படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. படத்தில் எந்தளவுக்கு ஜெயம்ரவியின் கேரக்டர் பேசப்பட்டதோ? அதை விட டபுள் மடங்கு அரவிந்த்சாமியின் வில்லன் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த ஒரு படத்தோடு நடிப்புக்கு முழுக்கு போட்டு விடலாம் என்று நினைத்திருந்த அரவிந்த்சாமியை இயக்குநர் பாலா கூட தனது புதுப்படத்தில் கமிட் செய்து விட்டார்.

Related Posts
1 of 16

இப்படி அடுத்தடுத்து இயக்குநர்கள் அரவிந்த்சாமியை கமிட் செய்யவும் ஜெயம்ரவியும் தனது புதுப்படத்தில் அரவிந்த்சாமியை ஒப்பந்தம் செய்யச் சொல்லியிருக்கிறார்.

அதன்படி பிரபுதேவா தயாரிப்பில் லஷ்மன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் புதுப்படமான ”போகன்” படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் அரவிந்த்சாமி.

இம்மாதம் 18 ம் தேதி பெரம்பூர் பின்னி மில்லில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான அரங்குகளில் ”டமால் டுமீல்” என்ற பாடல் காட்சியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.

‘தனி ஒருவன்’ படம் சூப்பர் ஹிட்டானதால் அந்த செண்டிமெண்ட் காரணமாகவே மீண்டும் ஜெயம்ரவி அரவிந்த்சாமியை இதில் ரெகமெண்ட் செய்திருப்பதாக படக்குழுவினர் தரப்பில் சொல்லப்படுகிறது.

இதிலும் அந்த ஹிட் செண்டிமெண்ட் செட்டாகட்டும்!