பொம்மை- விமர்சனம்
சூர்யா. அந்தக் காதலி யார்? அவரை எஸ்.ஜே சூர்யா சிறு வயதில் எப்படி தொலைத்தார்? பொம்மைக் காதலிக்காக எஸ்.ஜே சூர்யா சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன? என்பதே படத்தின் கதை
கிட்டத்தட்ட ஒரு சைக்கோத் தனமான கேரக்டர் தான் எஸ்.ஜே சூர்யாவிற்கு. கூடுமான வரை கூடுதலான நடிப்பால் நம்மை டயர்ட் ஆக்குகிறார். ஒரு சில காட்சிகளில் மட்டும் அவரது தனித்துவம் எடுபடுகிறது. பிரியா பவானி சங்கர் பொம்மையை ரீப்ளேஸ் பண்ணும் கேரக்டர் என்பதால் பொம்மை போலவே வந்து செல்கிறார். ஒரு தேவதை feel அவர் மீது வந்திருந்தால் அவருக்காக எஸ்.ஜே.சூர்யா மெனக்கெடும் போது நமக்கும் அவரோடு எஸ்.ஜே.சூர்யா சேர வேண்டும் எனத்தோன்றியிருக்கும். பச் அதுவும் மிஸ். சாந்தினி தமிழரசன் சிறிய கேரக்டரில் வருகிறார். பெரியளவில் அவரது கேரக்டரும் நடிப்பும் வொர்க் ஆகவில்லை
இளையராஜா கைவண்ணத்தில் ‘உல்லாசப்பறைவகள்’ படத்தில் இடம்பெற்ற நம் மனதை ஆட்கொண்ட ‘தெய்வீகராகம்’ என்ற பாடல் மட்டுமே ஆறுதல். மற்றபடி யுவன்சங்கர் ராஜா இசையில் பாடல்களும் பேக்ரவுண்ட் ஸ்கோரும் சோபிக்கவே இல்லை. ஒளிப்பதிவாளர் கூட இன்னும் சில வாவ் மொமெண்ட் ஷாட்களை வைத்திருக்கலாம்
இது ஒரு சைக்கோத் திரில்லர் கதையா? போலீஸ் இன்வெஸ்டிகேசன் கதையா? காதல் கதையா? மனப்பிறழ்வு கொண்டவரின் சோகக்கதையா? என நிறைய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளார் இயக்குநர் ராதாமோகன். பொன்.பார்த்திபன் வசனங்களிலும் நச் ரகமென்று ஒன்றுமில்லை. “அவளை மறந்துட்டு வேற எதை நினைக்கிறது?” என்ற வசனம் மட்டும் தூள். லாஜிக் அற்ற காட்சிகளும், தெளிவில்லாத திரைக்கதையும் இரண்டரை மணிநேரம் நம்மை தான் பொம்மை போல உட்கார வைக்கிறது
2/5
#bommai #பொம்மை