வைபவ்-அனகா நடித்துள்ள ‘பஃபூன்’ நாளை வெளியாகிறது!

Get real time updates directly on you device, subscribe now.

வைபவ்-அனகா முக்கிய வேடங்களில் நடித்துள்ள, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் ‘பஃபூன்’அதிரடியான அரசியல் ஆக்‌ஷன் படமாகும்.’பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ போன்ற படங்களில் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அசோக் வீரப்பன், ‘பஃபூன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

‘பஃபூன்’ படத்தை பற்றி பேசிய அசோக் வீரப்பன், இது முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் , மேடை நாடகங்களில் வரும் பஃபூனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. “ஒரு பஃபூன் வாழ்வில் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் முக்கிய கரு. சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய கடலோர மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தலைப்பைப் பார்த்து இது ஒரு நகைச்சுவைப் படமாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால், ‘பஃபூன்’ ஒரு அதிரடி அரசியல் கதைக்களம் கொண்ட படமாக இருக்கும்,” என்றார்.

கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம் நாளை (செப்டம்பர் 23) வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்கு வெளியீட்டு உரிமையை சக்திவேலனின் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி பெற்றுள்ளது.

#Buffoon #பஃபூன்