நடிகர் ராணா டகுபதி வெளியிட்ட ‘கப்ஜா’ பட டீசர்!

Get real time updates directly on you device, subscribe now.

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘கப்ஜா’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் டீசரை ‘பாகுபலி’ படப் புகழ் நடிகர் ராணா டகுபதி வெளியிட்டிருக்கிறார். வெளியான குறுகிய கால அவகாசத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

கன்னட திரையுலகிலிருந்து ‘கே ஜி எஃப் 1 & 2 ‘, ‘777 சார்லி’, ‘விக்ராந்த் ரோணா’ என பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் ஒட்டுமொத்த இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. இங்கு நட்சத்திர நடிகர்களாக ரசிகர்களின் பேராதரவுடன் உலா வரும் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் ‘கப்ஜா’ படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

Related Posts
1 of 2

இதனை நடிகர் உபேந்திராவின் ரசிகர்களும், நடிகர் கிச்சா சுதீப்பின் ரசிகர்களும், கன்னட திரையுலக ரசிகர்களும் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள். டீசருக்கு கிடைத்து வரும் பேராதரவை கண்டு உற்சாகமடைந்த படக்குழுவினர், ‘கப்ஜா’ படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ என தெரிவித்திருக்கிறார்கள்.

#Kabzaa #கப்ஜா