சந்திரமுகி2- விமர்சனம்
2005-ல் வெளியான சந்திரமுகி படத்தின் மற்றொரு வெர்சன் சந்திரமுகி2
ராதிகா குடும்பத்தின் பிரச்சனைகள் சந்திரமுகி பங்களாவை விட பெரிதாக இருக்கிறது. அதற்கு என்ன பரிகாரம்? என குருஜியிடம் கேட்க, குருஜி ராதிகாவின் குலதெய்வத்தை குடும்பத்தோடு வழிபடச் சொல்கிறார். அந்தக் குலதெய்வகோயில் சந்திரமுகியின் பரம எதிரியான வேட்டையன் கட்டிய கோவில். அந்தக் கோவிலுக்கு வரும் ராதிகா குடும்பம் சந்திரமுகி பங்களாவில் வசிக்கிறார்கள். அதிலிருந்து வரும் பிரச்சனைகள் எப்படியான தீர்வை சென்றடைகிறது என்பதே படத்தின் திரைக்கதை
லாரன்ஸ் பேய்க்குப் பயப்படாமல் நடித்துள்ளார். அப்படியே ரஜினியை காப்பி அடித்துள்ளதால் நிறைய இடங்களில் அவரை ரசிக்க முடியவில்லை. சந்திரமுகியாக கங்கணா ரணவத் பயமுறுத்தியுள்ளார். லெட்சுமிமேனென் நடிப்பில் ஏனோ அநியாயத்திற்கு செயற்கைத்தனம். ராதிகா கம்பீரம். ரவிமரியா, விக்னேஷ் போலவே வடிவேலுவும் படத்தில் இருக்கிறார் அவ்ளோ தான். மஹிமா நம்பியார் ஓரளவு பயன்படுத்தப்பட்டுள்ளார்
கீரவாணியின் இசையில் பாடல்கள் சுத்தமாக எடுபடவில்லை. பின்னணி இசை பரவாயில்லை. ஆர்.டி ராஜசேகரின் ஒளிப்பதிவு பல பிரம்மாண்டங்களை கண்முன் காட்டுகிறது. க்ளைமாக்ஸ் விஷுவல்ஸ் எல்லாமே சிறப்பு
ராகவா லாரன்ஸ் கேரக்டரை ராதிகாவின் மகள் பிள்ளைகளுக்கு காடியன் என்று கதைக்குள் கொண்டு வந்த விதமும், வேட்டையன் செங்கோட்டையன் என வில்லன்களை பிரித்த விதமும் படத்திற்கு உதவியுள்ளது. படம் மிகவும் நீளமாக இருப்பதை தவிர்த்திருக்கலாம். பழைய சந்திரமுகியில் பாடல்கள் காமெடி தூக்கலாக இருந்தது. இதில் அந்த இரண்டுமே வாஷ் அவுட்! ஓரளவு எமோஷ்னல் கூடி வந்திருப்பது சின்ன ஆறுதல். பழைய சந்திரமுகியை மறந்து விட்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் படத்தை ரசிக்கலாம்
2.75/5