அஜித்தை தொடர்ந்து ரஜினியின் வசூலையும் முந்திய விஜய்!
போட்டி படங்கள் இல்லாததால் விஜய்யின் தெறி படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. செங்கல்பட்டு ஏரியாவில் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் ரிலீசான மற்ற இடங்களில் படத்துக்கு ஏகோபித்த ஆதரவு குவிந்து வருகிறது.
ஏற்கனவே அஜித்தின் வேதாளம் வசூலை ஆறு நாட்களில் முறியடித்த தெறி திரைப்படம் வெளிநாடுகளில் ரஜினியின் எந்திரன் பட வசூலை நெருங்கி விட்டதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட்டாக வந்த தகவலின் படி A$360,000 ரூபாய் வசூல் செய்த ரஜினியின் எந்திரன் படத்தை விட தெறி படம் A$ 366,326 வசூல் செய்து எந்திரன் படத்தின் சாதனையை முறியடித்திருக்கிறது.
அதோடு இப்போது கோடைகாலம் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் தெறி படத்தின் வசூல் குறையாமல் இருக்கிறது.