ஒட்டும் இல்லை… உறவும் இல்லை… : சார்மி பிரிவால் வாடும் டைரக்டர்!

Get real time updates directly on you device, subscribe now.

charmi1

தெலுங்கில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த சார்மிக்கு சமீபகாலமாக புதுப்பட வாய்ப்புகள் வரவில்லை.

இதனால் நொந்து போனவர் தனது ஆஸ்த்தான இயக்குநர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து தனியாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து ஜோதிலட்சுமி என்ற படத்தை தயாரித்து நடித்தார்.

இழந்த மார்க்கெட்டை எப்படியும் இந்தப்படத்தில் பிடித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு நஷ்டம் தான் ஏற்பட்டது.

இந்த டென்ஷனில் இருந்தவர்  அந்த கோபத்தை அப்படியே பூரியின்  அலுவலகத்தில் வேலை பார்த்த உதவியாளர்கள், உதவி இயக்குநர்கள் ஆகியோர்களிடம் காட்டி விட, பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து சார்மிக்கும், பூரி ஜெகன் நாத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிற அளவுக்கு போய் விட்டது.

சார்மியை இழந்த சோகத்தில் இருந்த பூரி தன்னிடம் வேலை பார்த்த உதவி இயக்குநர்கள் அத்தனை பேரையும் நீக்கி திடீர் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

அவரின் இந்த முடிவால் கடுப்பாகியிருக்கும் உதவி இயக்குநர்கள் ”உங்க சண்டையில ஏம்மா எங்க வயித்துல அடிக்கிற…” என்று சார்மிக்கு எதிராக கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

நடப்பதையெல்லாம் பார்த்தால் இந்தப் பிரச்சனை இப்போதைக்கு முடியாது என்பதே சார்மி வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள்!