வாய்ப்புகள் குறையுது..! : குழப்பத்தில் ஹன்ஷிகா
2015ல் அரண்மனை, மீகாமன், ரோமியோ ஜூலியட், ஆம்பள, வாலு, புலி என அரை டஜன் படங்கள் ஹன்ஷிகா வசம் இருந்தது. ஆனால் இந்த வருடம் பொங்கலுக்கு வரும் நான்கு படங்களில் ஒன்றில் கூட ஹன்ஷிகா இல்லை.
அந்த வகையில் அவருக்கு சென்ற வருடத்தை கம்பேர் செய்யும்போது இந்த வருடம் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
கைவசம் அரண்மனை 2, போக்கிரி ராஜா உட்பட ஒருசில படங்களை மட்டுமே வைத்திருக்கும் அவர் ஏன் பட வாய்ப்புகள் குறைந்து விட்டன? என்பதற்கான காரணம் தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம்.
த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா இவங்கெல்லாம் எப்போதே ரிட்டயர்டு ஆகியிருக்கணும், ஆனா இன்னமும் நடிச்சிக்கிட்டு இருக்காங்க. அதேமாதிரி ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷ்னு புதுசா வர்ற நடிகைகள் குறைந்த சம்பளத்திலும் நடிக்க ஓ.கே சொல்றாங்க… இந்த ரெண்டு காரணங்களால தான் ஹன்ஷிகாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்திருக்கிறது என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.
இந்த விபரம் கூட தெரியாத புள்ளையா இருக்கியேம்மா..?