இது வேற லெவல் காதல் ! : ‘காதலும் கடந்து போகும்’ சீக்ரெட் சொல்லும் நலன் குமாரசாமி

Get real time updates directly on you device, subscribe now.

vijay-sethupathi

மிழ்சினிமாவின் அறிவுத் தேடலில் பட்டியலிடப்படும் ஆகச் சிறந்த படங்களில் ஒன்று விஜய் சேதுபதி நடித்த ‘சூது கவ்வும்’!

காட்சிக்கு காட்சி புதுமைகளைப் புகுத்தி தந்த அப்படத்தின் இயக்குநர் நலன் குமாரசாமி அந்த டெம்ப்ளேட்டிலிருந்து விலகி காதலும், காமெடியுமாக ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

படத்தின் பெயர் ‘காதலும் கடந்து போகும்’ .

இதிலும் ஹீரோ விஜய் சேதுபதி தான். அவருக்கு ஜோடியாக கேரளாவிலிருந்து மடோனாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் சி.வி.குமார் மற்றும் ஞானவேல்ராஜா இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

‘சூது கவ்வும்’ படத்துக்குப் பிறகு அவரது இயக்கத்தில் ரிலீசாகப் போகும் படமென்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எக்கச்சக்கம்!

Related Posts
1 of 32

”அதான் எனக்கு பயமா இருக்கு சார், ‘சூது கவ்வும்’ மூடோட ரசிகர்கள் இந்தப் படத்தை பார்க்க வரக்கூடாது. ஏன்னா அதோட கதைக்களம் வேற, இந்த ”காதலும் கடந்து போகும்” கதைக்களம் வேற என்கிறார்.

காதலும், காமெடியும் தான் படத்தின் பிரதானம் என்றாலும் அதிலும் வித்தியாசப்படுத்தியிருப்பது தான் திரைக்கதை சுவாரஷ்யம்.

”ஆமாம் சார், பொதுவா ஒரு படத்துல ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் காதல் வந்த பிறகு என்னென்னெ நடக்கும்கிறதை சொல்வாங்க. ஆனால் இதுல நாயகனுக்கும் – நாயகிக்கும் காதல் வரும் போது படம் முடிஞ்சிரும்” என்கிறார்.

படத்தோட எல்லா சீன்லேயும் காதலும், காமெடியும் ஒண்ணோட ஒண்ணு மிக்ஸ் ஆகியிருக்கும். அதனால ஃபேமிலியோட பார்க்கலாம். என்னோட முதல் படமான ”சூது கவ்வும்” படத்தை பி அண்ட் சி ரசிகர்கள் புரிஞ்சு பார்க்கிறதுக்கு கொஞ்சம் சிரமமா இருக்குன்னு சொன்னாங்க, அந்த மாதிரி இல்லாம எல்லா சென்டர் ரசிகர்களும் ரசிச்சுப் பார்க்கிற மாதிரி ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கோம். படத்தின் கதை பக்கம் திரும்பினார்…

ஒரு அரசியல்வாதியிடம் உதவியாளராக (அள்ளக்கையாக) இருக்கும் ஹீரோ விஜய் சேதுபதி, வேலை தேடி அலையும் ஹீரோயின் மடோனா, இவங்க ரெண்டு பேருக்கும் காதல் வந்தா எப்படியிருக்கும்?கிறதுதான் இந்தப்படம் என்று சொன்ன நலன் இன்னொரு விஷயத்தையும் ஒப்புக்கொண்டார்.

இந்தப்படம் ஒரு கொரியன் படத்தோட ரீமேக் தான். முறைப்படி அனுமதி வாங்கி தமிழ் ஆடியன்ஸுக்கு ஏத்தமாதிரி பண்ணிருக்கோம். அந்தப்படத்தை அப்படியே எடுத்திருக்கேன், ஆனா இதுல என்னோட ஸ்டைல் இருக்கும் என்றார்.