“கிளாப்” படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்!
இந்திய இசைத்துறையில் மிக முக்கியமான இடத்தை வகிக்கும் Lahari Music நிறுவனம். தங்களது ஒவ்வொரு ஆல்பம் வெளியீட்டின் போதும், அதை ரசிகர்களின் மனதிற்கு கொண்டு சென்று தொடர் வெற்றியை பதிவுசெய்து கொண்டிருக்கிறார்கள். விஸ்வாசம் போன்ற பெரு வெற்றி பெற்ற ஆல்பம் மற்றும் இந்தியாவே எதிர் நோக்கி காத்திருக்கும் பெரிய படங்களான RRR, KGF: Chapter 2 போன்ற படங்களின் இசை உரிமையை பெற்றிருக்கும் இந்நிறுவனம், இப்போது நடிகர் ஆதி நடித்த, தடகள விளையாட்டு படமான “கிளாப்” திரைப்படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ளது. இசைஞானி இளையராஜா உடன் இந்த படத்திற்காக இணைவதில், Lahari Music உடைய மொத்த குழுவும் பெரும் உற்சாகத்தில் உள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும்.