பாராட்டுக்களை குவித்து வருகிறது “கிளாப்” !
நடிகர் ஆதி நடிப்பில் சமீபத்தில் சோனி லைவ் தளத்தில் வெளியாகியிருக்கும் “கிளாப்” திரைப்படம், அனைத்து தரப்பினரிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. நடிகர் ஆதியின் அழுத்தமிகு முதிர்ச்சியான நடிப்பு சிறப்பான வகையில் பாராட்டுக்களை பெற்றுள்ளது. ஒரு ஓட்டப்பந்தய வீரனின் கனவு அவன் கண்முண் நொறுங்கிப்போக, அதை தாண்டி ஒரு சிறு பெண்ணை, தடைகளை கடந்து, பயிற்சி தந்து சாம்பியனாக்கி காட்டும் வீரனின் கதை தான் இந்த #கிளாப் திரைப்படம். ஓட்டப்பந்தய வீரனாக தோல்வி முகம், குடும்பஸ்தன், தடைகளை கடக்கும் பயிற்சியாளன் என பல முகங்களை ஒரே படத்தில் அழுத்தமாக பதிவு செய்து நடிகனாக தன் தனித்திறமையை நீருபித்திருக்கிறார் நடிகர் ஆதி. இளையராஜாவின் இசை, அழகான திரைக்கதை என இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.