சமூக அவலத்தை தோலுரித்துக் காட்டவரும் ‘காபி’

Get real time updates directly on you device, subscribe now.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘காபி’ என்ற படத்தின் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார் நடிகை இனியா.

ராகுல் தேவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ‘ஓம்’ சினி வென்ச்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்குகிறார்.

”ஏழ்மை நிலையிலிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், மிக இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்து விடுகிறார். வாழ்வின் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, சமாளித்து, இலட்சியத்துடன் தனது கனவை நனவாக்க முயலும் போதும், பொறுப்புணர்ச்சியுடன் தனது தம்பியை நன்கு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குகிறாள். இனி சுபிட்சமாக வாழலாம், கஷ்டங்கள் தீர்ந்து விடும் காலம் வந்து விட்டது எனும் போது,சற்றும் எதிர்பாராத பெரும் பின்னடைவுகளையும், அதிர்ச்சிகரமான நிகழ்வுகளையும் அவள் எதிர் கொள்ள வேண்டிய சூழல் அமைகிறது. அதை அதில் எப்படி வெற்றி பெற்றாள்” என்பதே இப்படத்தின் கதை.

Related Posts
1 of 137

நமக்கு தெரியாமலே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சமூக அவலத்தை இத்திரைப்படம் தோலுரித்து காட்டியிருக்கும் விதம் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. மிகவும் அத்தியாவசியமான ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திவிடும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்கடேஷ் எஸ் ஒளிப்பதிவு செய்ய, மோகன் ராஜா பாடல்களை எழுத, வெங்கட்நாத் இசையமைக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.