பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்- டைட்டில் ரகசியம் சொல்லும் இயக்குநர்
பேய்ப்படம் என்றாலே ஒரு பேய்த்தனமான எதிர்பார்ப்பு எழுவது இயல்பாகி விட்டது. அதுவும் முன்னணி கதாநாயகிகள் பேயப்படம் நடித்தால் முண்டியடித்து வருவார்கள் நம் ரசிகர்கள். தற்போது தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள பெட்ரோமாக்ஸ் பேய்ப்படத்திற்கும் அப்படி ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. Eagle’s eye புரொடக்சன் வழங்கும் இப்படத்தை இயக்கி இருக்கிறார் ரோகின் வெங்கடேசன். வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் இப்படத்தின் பிரஸ்மீட் சென்னை பிரசாத்லேப்-ல் நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன்,
“இந்த டைட்டிலுக்கான காரணத்தைப் பலரும் கேட்டார்கள். இது ஹாரர் படம் என்பதால் ஒரு கேட்சியான டைட்டில் வேண்டும் என்று நினைத்தேன். இந்த டைட்டிலின் பவர் அனைவருக்கும் தெரியும். கவுண்டமணி சார் இதை அவ்வளவு பிரமாதமாக மக்களிடம் சேர்த்திருக்கிறார். அதனால் தான் இந்த டைட்டில்” என்றார்.