கூலி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

ஓவர் கான்பிடன்ட் சினிமாவிற்கு ஆகாது என்பதை நிரூபித்துள்ளது கூலி

முன்னால் கூலியான ரஜினி ஒரு மேன்சன் நடத்துகிறார். அவரின் உற்ற நண்பரான சத்யராஜ் கொல்லப்படுகிறார். சத்யராஜின் மூன்று மகள்களுக்கும் ஆபத்து இருப்பதை ரஜினி அறிகிறார். அவர்களை காப்பாற்ற நாகார்ஜுனா நடத்தும் இல்லீகல் பிஸ்னெஸ் ஏரியாவிற்குள் செல்கிறார். அதன்பின் என்ன நடந்தது என்பதும் ரஜினியின் பின்கதை என்ன என்பதுமே படத்தின் மீதிக் கதை

வயதானாலும் ஸ்டைல் குறையல என்பதை ரஜினிக்கு இந்தப் படத்திலும் சொல்ல முடியும். தன்னால் முடிந்தளவிற்கு படத்திற்கு எனர்ஜி சேர்த்துள்ளார். நாகார்ஜுனாவின் கேரக்டரை அநியாயத்திற்கு வீணடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மலையாள நடிகர் செளபின் மட்டும் அசத்தியுள்ளார். ஸ்ருதிஹாசனுக்கு சொல்லிக்கொள்ளும் படியான கேர்கடர். நன்றாக நடித்துள்ளார். அவரின் டப்பிங் தான் சுமாருக்கும் கீழ். சத்யராஜ் உபேந்திரா ஆகியோர் ஒகே . அமிர்கான் கேமியா படத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை
இன்னும் ஏராளமான கேரக்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் யாரையும் சுட்டும் படி யாரும் சோபிக்கவில்லை. ஒரு Female கேரக்டர் ஒகே வாக வொர்க் ஆகியுள்ளது

அனிருத் வழக்கம் போல படத்தைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார். கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு தரமாக அமைந்துள்ளது. எடிட்டர் பிலோமின் இன்னும் அரை மணி நேரத்தை வெட்டியிருக்கலாம்

திரைக்கதை நேர்கோட்டில் தான் செல்கிறது. ஆனால் எங்குமே ஆடியன்ஸ்க்கான கனெக்ட் பேக்டர் இல்லை. ஸ்டோரி டிஸ்கசனில் எங்கு மாஸ் ஏற்றலாம் என்ற டிஸ்கசன் மட்டுமே நடந்திருக்கும் போல. சிலபல ட்விஸ்ட் படத்தில் இருந்தாலும் எதுவுமே ஆச்சர்யத்தைத் தரவில்லை. பிரம்மாண்டமான ஸ்டார் காஸ்டிங் என்பதற்காக வேண்டுமானால் ஒரு தடவைப் பார்க்கலாம்
2.75/5