கொரானாவால் டைட்டில் ரிலீஸும் தள்ளி வைப்பா?

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா காரணமாக டைட்டில் ரிலீஸை கூட தள்ளி வைத்து கிலி கிளப்புகிறார் ஓர் இயக்குநர்…அவர் பெயர் சபரிநாதன். தன் படம் பற்றி அவர் பேசியதாவது

கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி முதல் தமிழக அரசு 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. அதன் காரணமாக பல பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது அதில் சினிமா துறையில் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசு 144 தடை உத்தரவை தளர்த்தி சினிமா துறையில் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளான ரீ ரிக்கார்டிங் டப்பிங் போன்ற நிலைகளில் தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி ரீரெக்கார்டிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மே 18-ஆம் தேதி முதல் பார்வையை வெளியிடவுள்ளோம். இந்த சூழ்நிலைக்கு ஏற்ப நல்ல கதையோடு உங்களை விரைவில் சந்திப்போம்”என்றார்