ஜெயிலர்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

பழைய மந்தையில் புதிய கள் ஆக இறங்கியுள்ள ஜெயிலர் ரசிகர்களை கிறங்கடித்ததா?

பேரனோடு யூட்யூப் வீடியோ போட்டபடி பொழுதைக் கழிக்கும் முன்னாள் ஜெயிலர் ரஜினி. அவரது மகன் வசந்த் ரவி ஒரு asst கமிஷ்னர். அவர் சிலை கடத்தல் கும்பலைக் கண்டுபுடிக்க முனைகிறார். அதனால் ஒரு கட்டத்தில் அவரே கடத்தப்படுகிறார். பின் கொல்லப்பட்டார் என்ற தகவல் ரஜினிக்கு வந்து சேர, ரஜினி டைகராக அவதாரம் எடுத்து எப்படி கடத்தல் கும்பலை சாவு வேட்டை நடத்தினார் என்பதே படத்தின் திரைக்கதையாக விரிகிறது

Related Posts
1 of 2

ரஜினியின் உடல்பலத்தை நன்றாக அறிந்து அவரது கேரக்டரை வடிவமைத்துள்ளார் நெல்சன். கொடுத்த கேரக்டரை தன் அனுபவ நடிப்பால் அழகாக மாற்றியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. ரஜினிக்கு அடுத்து சில இடங்களில் ரஜினியை விட ஸ்கோர் செய்கிறார் வினாயகம். மோகன்லால், ஜாக்கிஷெராப், தமன்னா, சுனில், சிவராஜ்குமார் ஆகியோர் சின்ன கேரக்டர்களில் தான் வருகிறார்கள். ஆனாலும் பெரிதாக ஸ்கோர் செய்கிறார்கள். வசந்த் ரவி கதாப்பாத்திரம் கவனிக்க வைக்கிறது. பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ரம்யாகிருஷ்ணன் கேரக்டர் பெரிதாக ஜொலிக்கவில்லை. மிர்ணா அந்த குட்டிப்பையன் ok ரகமே! யோகிபாபு,விடிவி கணேஷ் , கிங்ஸ்ட்லி என காமெடியன்கள் நிறையபேர் இருந்தாலும் யோகிபாபு மட்டுமே காமெடியில் ஆறுதல்

கேமராவிற்கு வெளியே படத்தின் one of the hero சாட்சாத் அனிருத் தான். பாடல்கள் பின்னணி இசை இரண்டிலுமே பின்னிபெடலெடுத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும் படத்தில் அட்டகாசம்

முன்பாதியில் நம்மை நல்ல என்கேஜிங்காக வைத்திருக்கும் படம் பின்பாதியில் சற்று தடம் மாறிச் செல்கிறது. நிறைய காட்சிகள் லென்த்! லாஜிக் என்பதை பார்த்தால் இப்படம் டப்பா டான்ஸ் ஆடிவிடும். ஒரு asst கமிஷ்னர் கடத்தப்பட்டார் கொல்லப்பட்டார் என்பதெல்லாம் ரொம்பச் சாதாரணமாக படத்தில் கடந்து போவது நெருடல். சிலை கடத்தல் பின்னணி எதுவுமே தெளிவாக விளக்கப்படவில்லை. படத்தின் மெயின் மேட்டரான அப்பா பையன் செண்டிமெண்ட் காட்சிகளும் ஒட்டவில்லை. இவற்றை மறக்கடிக்கும் விதமாக மாஸான க்ளைமாக்ஸை வைத்து தப்பிவிட்டார் நெல்சன். எப்படியோ இந்த ஜெயிலர் மூலமாக பீஸ்ட் என்ற நெகட்டிவ் சேடில் இருந்தும் நெல்சனும், அண்ணாத்த எனும் கொடும் சம்பவத்தில் இருந்து ரஜினியும் மீண்டு வந்திருக்கிறார்கள் என்பது உண்மை
3/5