கயல் சந்திரன் ஹீரோவாக நடிக்கும் காதல் – காமெடிப் படம் ‘டாவு’

Get real time updates directly on you device, subscribe now.

daavu

மிழ்சினிமாவில் டைட்டில் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. திரைக்கதை எழுதுவதற்காக ஆறு மாதங்கள் கூட ஒதுக்கி எழுதும் இயக்குனர்கள் அந்தப் படத்துக்கு டைட்டில் மட்டும் யோசிக்க படாதபாடு படுகிறார்கள். இதற்காக ஏற்கனவே ஹிட்டாகிய பழைய தமிழ்ப்பட பெயர்களை வைத்து விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட இயக்குனர்களுக்கு மத்தியில் ‘தில்லுக்கு துட்டு’ படத்தைத் தொடர்ந்து தான் இயக்கப் போகும் புதுப்படத்துக்கு டாவு என்கிற சுவாரஷ்யமான டைட்டிலை வைத்திருக்கிறார் இயக்குனர் ராம் பாலா.

முழு நீள காமெடி படமான இதில் கயல் சந்திரன் ஹீரோவாக நடிக்கிறார்.

”இந்த காதல்-காமெடி கதைக்கு சந்திரன் நிச்சயம் பெரும் பலம் சேர்ப்பார். தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க அவர் முனைப்போடு செயல்பட்டு வருகிறார். அவரது வேகமும், எங்களது தயாரிப்பாளர் ரகுநாதன் பி.எஸ் அவர்களின் தொலைநோக்கு பார்வையும் இணைந்து ‘டாவு’ படத்தை சிறப்பாக்க உள்ளது.

இந்தக் கதைக்கு ‘டாவு’ தான் பொருத்தமான தலைப்பு. இன்றைய சினிமாவை ஆதரவளித்து வரும் இளைஞர்களுக்கு பிடித்தமான தலைப்பு இது. இந்த தலைப்பை போல் இந்த படமும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்” என்றார் இயக்குனர் ராம்பாலா.

இந்த படத்தை ‘டூ மூவி பப்ஸ்’ சார்பில் ரகுநாதன் பி.எஸ் தயாரிக்கிறார்.

முனீஷ்காந்த், லிவிங்ஸ்டன், ஊர்வசி மற்றும் மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையில், தீபக் குமார் பதி ஒளிப்பதிவில், பிரவீன் கே.எல். படத்தொகுப்பில் ‘டாவு’ உருவாகவுள்ளது.